தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ராணுவ அதிகாரிகள், வீரர்கள் விழிப்புணர்வு பயணம்

21 Jan 2026, 3:58 pm
ராணுவ அதிகாரிகள், வீரர்கள் விழிப்புணர்வு பயணம்
<p><strong>ராணுவ அதிகாரிகள், வீரர்கள் விழிப்புணர்வு பயணம்</strong></p> <p>உதகை, ஜன.21- போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்க ளின் குடும்பத்தினரை கௌரவிக்கும் வகையில், குன்னூரிலிருந்து ராணுவ அதிகாரிகளின் இருசக்கர வாகன பய ணம் செவ்வாயன்று துவங்கியது. நாட்டின் நூற்றாண்டு பழமைமிக்க ராணுவப் பிரிவுகளில் ஒன்றாக விளங் கும் குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர், இந்தியாவுக்காக பல்வேறு &nbsp;போர்களிலும் அண்டை நாடுகளுடன் ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலைகளிலும் வீரத்துடன் போராடி பல வெற்றிகளை பெற்றுத் தந்த பெருமைக்குரிய ராணு வப் பிரிவாக உள்ளது. இந்த ரெஜி மென்டின் வீரர்கள் பெற்ற சாதனைகள் நாடு முழுவதும் பாராட்டுகளை பெற் றுள்ளன. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென் டரில் பணியாற்றி ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தி னருடன் தொடர்ந்த தொடர்பை வலுப் படுத்தவும், குறிப்பாக பங்களாதேஷ் போரில் போரிட்டு உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத் தலைவிகளை நேரில் சந்தித்து கௌரவிக்கும் நோக் கத்துடனும், விழிப்புணர்வு ஏற்படுத் தும் வகையில் தென் மாநிலங்களுக்கி டையே ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு இரு சக்கர வாகன பயணம் செவ்வாயன்று புறப்பட்டது. குன்னூர் மெட்ராஸ் ரெஜி மென்ட் சென்டர் பேரக்ஸ் பகுதியிலி ருந்து எட்டு பேர் கொண்ட ராணுவ அதி காரிகள் மற்றும் வீரர்கள் அடங்கிய குழு, இருசக்கர வாகனங்களில் புறப்பட்டுச் சென்றனர். இந்த பயணத்தை மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் கமாண்டன்ட் கிருஷ்ணரோஸ் தாஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ராணுவ அதிகாரி கேப்டன் மனிஷ் குமார் தலைமையில் புறப்பட்ட இந்த &nbsp;குழு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள மண் டியா, மைசூர், மடிக்கேரி, கொடகு, மங் களூரு, ஹாசன், சிக்மங்களூர் உள் ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கேரளம் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு பய ணம் மேற்கொள்கிறது. இந்த பயணத் தின் போது, அங்குள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து, பங்க ளாதேஷ் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத் தலைவிகளை கௌரவிக்கும் வகையில், பங்களா தேஷ் அரசு வழங்கிய பதக்கங்கள் மற் றும் சான்றிதழ்களை வழங்கி மரியாதை செலுத்துகின்றனர். மேலும், மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரின் செயல்பாடு கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, எந்நேரத்திலும் அவர்களுடன் தொடர் பில் இருந்து ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக உறுதியளிக்கும் விதத்தி லும் இந்த பயணம் நடைபெறுகிறது. இந்த பயணம் ஜன.24 ஆம் தேதி குன் னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் ராணுவ முகாமுக்கு மீண்டும் வந்தடை யவுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.