பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு
17 Jun 2026, 9:18 pm
<p><strong>பணியின்போது உயிரிழந்த ராணுவ வீரருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு</strong></p><p>விருதுநகர், ஜூன் 17- அருணாச்சலப் பிர தேசத்தில் பணியாற்றி வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ அதி காரி உடல்நலக் குறைவால் உயிரிழந்த நிலையில், அவ ரது உடல் முழு அரசு மரி யாதையுடன் தகனம் செய் யப்பட்டது. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அரு கேயுள்ள நாச்சியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜி. வேணுகோபால் (59). இந் திய ராணுவத்தின் பொறியி யல் பிரிவில் பணியாற்றி வந்த அவர், அருணாச்சலப் பிரதேச எல்லைப் பகுதியில் சாலை அமைக்கும் பணி யில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறை வால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், மனைவியின் சொந்த ஊரான விருதுநகர் அருகேயுள்ள மீச லூர் கிராமத்திற்கு புதன் கிழமை காலை கொண்டு வரப்பட்டது. ராணுவ வீரரின் உட லுக்கு சாத்தூர் கோட்டாட்சி யர் கனகராஜ் மற்றும் விருது நகர் துணைக் காவல் கண்கா ணிப்பாளர் யோகேஸ்வரன் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். பின்னர் காவல்துறை யினரின் அணிவகுப்புடன் அரசு மரியாதை செலுத்தப் பட்டு, 21 குண்டுகள் முழங்க இறுதிச்சடங்குகள் நடை பெற்றன. தொடர்ந்து அவ ரது உடல் முழு அரசு மரியா தையுடன் தகனம் செய்யப் பட்டது. இந்த நிகழ்வில் ராணுவ அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள், உறவி னர்கள் மற்றும் பொதுமக் கள் திரளாக கலந்து கொண்டு வீரருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.</p>
