தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆரம்ப சுகாதார நிலையம் இணைப்பு அரியபாடி கிராம மக்கள் கோரிக்கை ஏற்பு

30 Oct 2026, 11:38 pm
ஆரம்ப சுகாதார நிலையம் இணைப்பு அரியபாடி கிராம மக்கள் கோரிக்கை ஏற்பு

ஆரம்ப சுகாதார நிலையம் இணைப்பு அரியபாடி கிராம மக்கள் கோரிக்கை ஏற்பு

திருவண்ணாமலை, அக்.30-திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஒன்றியம் அரியபாடி கிராமம் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த கிராமத்தை 8 கி.மீ தொலைவில் உள்ள ஆனைபோகி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணைத்ததால் பல்லாண்டுக் காலமாக அரியபாடி கிராம மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வரு கின்றனர்.

8 கி.மீ. தொலைவில் உள்ள ஆனை போகி ஆரம்ப சுகாதார நிலையம் சென்று வருவதில் முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் மிகுந்த சிரமத்தையும் மன உளைச்சலையும் எதிர்கொண்டு வரு கின்றனர்.எனவே அரியபாடி கிராமத்தை பெரண மல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இணைக்கக் கோரி வெள்ளிக்கிழமையன்று (அக்.30) செய்யாறு மாவட்ட சுகாதார அலு வலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.இதையடுத்து செய்யாறு மாவட்ட சுகாதார அலுவலர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.

அப்போது,அரியபாடி ஊராட்சியைப் பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் இணைக்க சென்னை இயக்குனர் அலுவலகம் மூலம் விரைவில் உத்தரவு பெற்றுத்தரப்படும் எனவும், அதுவரையில் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை மற்றும் அரசு சலுகை, நோயாளிகளுக்குரிய மருந்து மாத்திரைகள் தடையின்றி பெரணமல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே வழஙகப்படும் எனவும் எழுத்துப்பூர்வமான கடிதம் வழங்கப்பட்டது.

இப்பேச்சுவார்த்தையில், கண்காணிப்பா ளர் விநாயகமூர்த்தி, மாவட்ட தாய்சேய் நல அலுவலர் மகேஸ்வரி, வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பெரணமல்லூர் சேகரன், வட்டார செயலாளர் பிரபாகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் சரஸ்வதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் முனியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.