முந்தய பக்கம்

அரியபாடி கிராமத்தில் பாலர் பூங்கா அமைப்பு

4 Nov 2026, 1:12 am
அரியபாடி கிராமத்தில் பாலர் பூங்கா அமைப்பு

அரியபாடி கிராமத்தில் பாலர் பூங்கா அமைப்பு

திருவண்ணாமலை, நவ. 3-திருவண்ணாமலை மாவட்டம், பெரண மல்லூர் ஒன்றியம், அரியபாடி கிராமத்தில் பாலர் பூங்கா அமைப்புக் கூட்டம் நடை பெற்றது.

கடந்த அக்டோபர் 2 அன்று கன்னி யாகுமரியில் நடைபெற்ற பாலர் பூங்கா வின் மாநில மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் பாலர் பூங்கா அமைப்புகளை உருவாக்கத் தீர்மானிக்கப்பட்டது. அதனடிப்படையில் அரியபாடி கிராமத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் 40 பாலர்கள் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாலர் பூங்காவின் அரியபாடி கிளைத் தலைவராக தாமரைச்செல்வன், செயலாளராக கபிதாஸ்ரீ, பொருளாளராக அன்பரசி, ஒருங்கிணைப்பாளராக ஜீவதாஸ் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் எழுத்தாளர் பெரணமல்லூர் சேகரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பொருளாளர் சரஸ்வதி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் முனி யம்மாள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் வாசுகி, சமூக செயற்பாட்டாளர் பிரபாகரன், அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் ஒன்றிய துணைத்தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.

Share
FacebookXWhatsAppTelegram