டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் மனு
16 Jun 2026, 11:07 pm
<p><strong>டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் மனு</strong></p><p>அரியலூர், ஜுன் 16- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த வல்லம் கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினியிடம், பொதுமக்கள் திங்கட்கிழமை மனு அளித்தனர். இக்கிராமத்திலுள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த வருபவர்கள், மது அருந்திவிட்டு, அதன் பாட்டில்களை சாலைகளிலும், அருகிலுள்ள விவசாய நிலங்களிலும் வீசிச் செல்வதால், விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், சாலையில் செல்லும் பொதுமக்கள், பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளின் கால்களை, கண்ணாடி துகள் பதம் பார்த்து விடுகிறது. மேலும், சாலையில் செல்லும் மாணவிகள், பெண்கள் ஆகியோர் மது அருந்துபவர்களால் கேலி, கிண்டலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கோவில் அருகிலுள்ள இந்த கடையை மூடக் கோரி, அப்பகுதி மக்கள், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்காததால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், திங்கட்கிழமை ஆட்சியர் ந. மிருணாளினியை சந்தித்து, டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர்.</p>
