அரியலூரில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு!
11 Jul 2026, 9:34 pm
<p><strong>அரியலூரில் தீக்கதிர் சந்தாக்கள் அளிப்பு!</strong></p><p>அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை உள்ளிட்ட மூன்று ஒன்றியக்குழுக்களில் முதற்கட்டமாக சேகரிக்கப்பட்ட தீக்கதிருக்கான 70 சந்தாக்கள், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி. நாகராஜனிடம் வழங்கப்பட்டன. கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, கே. கிருஷ்ணன், தீக்கதிர் பொறுப்பாளர் ஏ.கந்தசாமி, அரியலூர் ஒன்றியச் செயலாளர் அ.அருண்பாண்டியன், செந்துறை வட்டச் செயலாளர் கு. அர்ச்சுணன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. சாமிதுரை, மாவட்டக்குழு உறுப்பினர் பி. அழகுதுரை, மலர்க்கொடி, மூத்த நிர்வாகி சிற்றம்பலம் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.</p>
