தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

27 May 2026, 9:21 pm
தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள்:  மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

அரியலூர், மே 27 - அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன் னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து பேசுகையில், நடப்பு ஆண்டிற்கான முதல் நிலை மீட்பாளர்கள், என்.சி.சி, என்.எஸ்.எஸ், என்.ஓய்.கே, சாரணர், ஊர்க்காவல் படையினர் போன்ற தன்னார்வ லர்களின் விவரங்களை புதுப்பித்திட வேண் டும்.

மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் உள்ள தகவல் தொடர்பு உபகரணங்களான தொலை பேசி, செயற்கைக்கோள் தொலைபேசி, ஏர்கு கருவிகள் ஆகியவை மின்கல சேமிப்பு வசதி யுடன் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.

நிவாரண முகாம்களில் மின்வசதி, உணவு, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை யினை முன்னிட்டு மழைநீர் வடிகால்கள் தூர்வாருதல், பலவீனமான மரங்கள், மரக் கிளைகள் அகற்றுதல், பாலங்கள் மற்றும் மதகுகளுக்கு அடியில் உள்ள அடைப்பு களை அகற்றுதல், பழைய மற்றும் பாழ டைந்த கட்டிடங்களை அடையாளம் கண்டு பயன்படுத்துவதை தடை செய்தல், பலவீன மான மின்கம்பங்கள், மின்கம்பிகள் ஆகிய வற்றை கண்டறிந்து அவைகளை மாற்று வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுத்திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் செய்ய வேண்டும்.

மேலும், மீட்பு உபகரணங்களை திட்ட மிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத் திருக்க வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப் படும் பதற்றமான பகுதிகளை கண்காணிக்க வேண்டும். உணவுப் பொருள்கள் இப்பருவ மழை காலங்களில் 2 மாதங்களுக்கு இருப்பு வைத்திருக்க வேண்டும் என அலுவலர் களுக்கு உத்தரவிட்டார்.

பொதுமக்கள் பேரி டர் காலத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலை பேசி எண்ணுக்கும், கட்ச்செவி 7092300010 என்ற எண்ணுக்கும் பாதிப்புகள் குறித்து தகவல் அளிக்கலாம்” என்றார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (பொது) சித்ரா மற்றும் வட்டாட்சியர்கள், அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.