தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செப்டிக் டேங்க் பணியில் 3 தொழிலாளர்கள் மரணம் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு கோரி சிபிஎம் தலைமையில் போராட்டம்!

3 Oct 2026, 10:55 pm
செப்டிக் டேங்க் பணியில் 3 தொழிலாளர்கள் மரணம் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு கோரி சிபிஎம் தலைமையில் போராட்டம்!

செப்டிக் டேங்க் பணியில் 3 தொழிலாளர்கள் மரணம் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு கோரி சிபிஎம் தலைமையில் போராட்டம்!

அரியலூர், அக். 3 -அரியலூர் மாவட்டம் செந்துறையில் வீட்டின் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட 3 தொழிலாளர்கள் அக்.2 அன்று மூச்சுத்திணறி உயிரிழந்தனர். உடல்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுஉள்ளன.

இந்நிலையில், பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்கள் செப்டிக் டேங்கிற்குள் இறக்கப்பட்டதால், மனிதக் கழிவை மனிதர் அகற்றுவதற்கான தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்; உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் எம். இளங்கோவன் தலைமையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டச் செயலாளர் கோ. வெற்றிச்செல்வன், அரியலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி. லெனின், எஸ். ரேணுகா, துரை. அருளன், மூத்த நிர்வாகி சிற்றம்பலம், செந்துறை வட்டச் செயலாளர் கு. அர்ச்சுணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. பத்மாவதி, அருணாச்சலம், செண்பகவள்ளி உள்ளிட்டோரும், உயிரிழந்த ராமச்சந்திரனின் மனைவி வளர்மதி, தினகரனின் மருமகன்கள், மகள்கள், பாஸ்கரின் உறவினர் புருஷோத்தமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர்.

அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், 3 குடும்பங்களுக்கும் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, குழந்தைகளின் கல்விச் செலவை அரசுஏற்க வேண்டும் என கோரப்பட்டது.வீட்டின் உரிமையாளர் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நிலையில், செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலரையும் (கிராம ஊராட்சி) கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.