தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

செப்டிக் டேங்கில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி தொடரும் போராட்டம்

5 Oct 2026, 10:58 pm
செப்டிக் டேங்கில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி தொடரும் போராட்டம்

செப்டிக் டேங்கில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு நிவாரணம் கோரி தொடரும் போராட்டம்

அரசுக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

சென்னை, அக். 5 –அரியலூர் மாவட்டம் செந்துறையில் செப்டிக் டேங்கிற்குள் இறங்கி நச்சு வாயு தாக்கி உயிரிழந்த 3 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு சட்டப்படியான நிவாரணத்தை உடனே வழங்கக் கோரி, 4ஆவது நாளாக போராட்டத்தை தொடர வேண்டிய அவலநிலைக்குத் தள்ளிய அரசு நிர்வாகத்திற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

அரியலூரில் அக். 2ஆம் தேதியன்று செப்டிக் டேங்கில் சென்ட்ரிங் பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தினகரன், பாஸ்கர், ராமச்சந்திரன் ஆகிய மூன்று தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், திருச்சி மாநகர் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வன் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் லெனின் உள்ளிட்டோர் உறவினர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மனிதக் கழிவை மனிதர் அள்ளுதல் தடைச் சட்டத்தின் கீழ் வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்ட போதிலும், மூன்று நாட்களாகியும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குச் சட்டப்படியான நிவாரணம் வழங்கப்படவில்லை.மாவட்ட நிர்வாகத்தின் இந்தத் தாமதம் உச்ச நீதிமன்ற வழிகாட்டல்களுக்கும், சட்டத்திற்கும் முற்றிலும் முரணானது எனக் கண்டித்துள்ள தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மாநிலத் தலைவர் த. செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் பா. சுகந்தி ஆகியோர், தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணத்தை விரைந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.