முந்தய பக்கம்

பள்ளி வாகனங்கள் ஆய்வு

22 May 2026, 9:44 pm
பள்ளி வாகனங்கள் ஆய்வு
<p><strong>பள்ளி வாகனங்கள் ஆய்வு</strong></p><p>அரியலூர், மே 22- அரியலூரிலுள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதையொட்டி அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளி வாகனங்கள் அனைத்தும் வட்டார போக்குவரத்து அலுவலர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, பள்ளி வாகனங்களை நேரில் பார்வையிட்டு, வாகனங்களின் பதிவுச் சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துநர் உரிமம், முதலுதவிப் பெட்டி, அவசர வழி, தீயணைப்புக் கருவி, படிக்கட்டுக்கள், கதவுகள், ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்து பணியை தொடக்கி வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா. சாஸ்திரி, வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவ, மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி, அரியலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தில் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் இந்த ஆய்வுப் பணியை மேற்கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram