அரியலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
9 Aug 2026, 11:55 pm

அரியலூரில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக. 9- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய பணியிடங்களை உருவாக்காமல் ஏற்கனவே உள்ள இடங்களை மாற்றி அமைக்கும் தமிழக அரசின் பணி நிரவலை ரத்து செய்ய வேண்டும். ஒன்றிய அரசில் உள்ளது போல் செவிலியர் என்ற பதவியை செவிலியர் அலுவலர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக கால முறை ஊதியத்தில் பணியாற்றும் ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜெயங்கொண்டம், செந்துறை, ஆண்டிமடம் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி வரும் 337 செவிலியர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினர்.