முந்தய பக்கம்

மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி: பொதுமக்கள் நூதனப் போராட்டம்

13 Jun 2026, 11:16 pm
மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி:  பொதுமக்கள் நூதனப் போராட்டம்
<p><strong>மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சி: பொதுமக்கள் நூதனப் போராட்டம்</strong></p><p>அரியலூர், ஜுன்.13- ஜெயங்கொண்டம் அருகே, மூடிய டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க முயற்சித்ததாகக் கூறி, பொதுமக்கள் நூதன முறையில் ஒப்பாரி போராட்டம் நடத்தினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள வாரியங்காவல் கிராமத்தி லுள்ள அரசு டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி கடந்த ஜுன் 1 ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் தீர்வு எட்டப்பட்டு கடந்த 13 நாட்களாக டாஸ்மாக் கடையை திறக்கவில்லை. இந்நிலையில், மூடிய வாரியங்காவல் டாஸ்மாக் கடையை மீண்டும் திறப்பதற்கு அரசு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் வேன் மூலம் வந்து டாஸ்மாக் கடை அருகே திரண்டனர். அப்போது பொதுமக்கள் ஒன்று கூடி போராட்டம் நடத்துவதற்கு தயாராக இருந்த நிலையில் டாஸ்மாக் கடையை திறக்கவில்லை. பிரச்சினைக்குரிய வாரியங்காவல் பகுதியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க கூடாது என்பன வலியுறுத்தி, அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக நூதன முறையில் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram