தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

29 May 2026, 12:06 am
குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன்  சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீர் கேட்டு காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

அரியலூர், மே 28- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, சிலால் கிராமத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக முறையாக குடிநீர் வழங்காததால் குடிநீருக்காக சிரமப்பட்டு வந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் ஜெயங்கொண்டம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தா.பழூர் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் வரவேண்டும் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்வோம் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதுகுறித்து, அதிகாரியிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது பொதுமக்கள் பல்வேறு பகுதிகளுக்கு பல்வேறு அலுவலகம் காரணமாகச் செல்ல இருப்பதால் உடனடியாக மறியலை கைவிடுமாறும் கேட்டுக் கொண்டனர். அப்போது மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் ஆர். செந்தில்வேல், தினேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.