தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போதைக் கும்பலால் தாக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு: சிபிஎம் கடும் கண்டனம்

1 Nov 2026, 11:18 pm
போதைக் கும்பலால் தாக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு: சிபிஎம் கடும் கண்டனம்

போதைக் கும்பலால் தாக்கப்பட்ட ஊர்க்காவல் படை வீரர் உயிரிழப்பு: சிபிஎம் கடும் கண்டனம்

அரியலூர், நவ. 1 –அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவரும், தளவாய் காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படை வீரராகப்பணியாற்றி வந்தவருமான சி. வெங்கடேசன், இரவு நேர ரோந்துப் பணியின் போது மது போதையில் இருந்த நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎம் அரியலூர் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்காகப்பணியாற்றியஊர்க்காவல் படை வீரர் போதைப் பழக்கத்தின் கோரப்பிடியில் சிக்கியவர்களால் கொலை செய்யப்பட்டது மிகுந்த அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மனைவியை இழந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வெங்கடேசனின் மறைவு,

அக்குழந்தைகளை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது. போதைப்பொருள் ஒழிப்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் குழந்தைகளின் படிப்புச் செலவை அரசே ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, இழப்பீடு மற்றும் நிவாரணக் கோரிக்கைகளை வலியுறுத்திச் செந்துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்க் கோட்டாட்சியர் மனோகரன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. செந்துறை வட்டாட்சியர் கோவிந்தராஜ், டிஎஸ்பி

சாலை ராம் சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடந்த இப்பேச்சுவார்த்தையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க. வைத்திலிங்கம், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். இளங்கோவன், மாவட்டச்செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், துரைசாமி, துரை அருணன்,அம்பிகா,பத்மாவதி மற்றும் வெங்கடேசனின் தாயார்கனகவல்லி, மகன் தமிழ்ச்செல்வன், மகள்அர்ச்சனா, சகோதரி கவிதா, சகோதரர்கள் செந்தில்குமார், காமராஜ், தனவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், “ஊர்க் காவல் படை காவலரை ரோந்து பணிக்கோ, பாதுகாப்புப் பணிக்கோ பயன்படுத்தக் கூடாது என சட்டம் இருந்தும்ஊர்க்காவல் படை வீரரை ரோந்துப் பணிக்கு அனுப்பியதாலேயே இந்த அநீதி நடந்துள்ளது. காவல் துறை நிதி உதவி வழங்க மறுத்துள்ள நிலையில், தமிழக அரசு வெங்கடேசனின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம், ஈமச்சடங்கிற்கு ரூ. 25 ஆயிரம், 2 குழந்தைகளின்கல்வி நிதி உதவி மற்றும் இலவச வீட்டுமனை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அதுவரை உடலைப் பெறமாட்டோம்;நிவாரணம் வழங்கப்படாவிட்டால் மாவட்டம் தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும்” என எச்சரித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.