தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏழ்மையிலும் சிறகடித்து பறக்கும் சிறுமி!

20 May 2026, 1:35 am
ஏழ்மையிலும் சிறகடித்து பறக்கும் சிறுமி!

ஏழ்மையிலும் சிறகடித்து பறக்கும் சிறுமி!

அரியலூர் மண்ணில் பிறந்த 10 வயது சிறுமி ஒருத்தி, கஜகஸ்தா னின் குளிர்ந்த அல்மாட்டி நகரில் சது ரங்கப் பலகையை முன்னிறுத்தி இந்தி யாவின் கொடியை உலக அரங்கில் பறக்கவிட்டிருக்கிறாள்.

அவளது பெயர் ஷர்வானிகா.

வீட்டில் அன்பு டன் “ஷர்வா” என்று அழைக்கப்படும் இந்தச் சிறுமி, 10 வயதுக்குட்பட்ட மகளிர் பிரிவில் உலக சதுரங்க சாம்பியன் பட்டம் வென்று தங்கப்பதக்கம் அணிந்த போது, இந்தியாவின் முகம் பெருமையில் பிரகாசித்தது.

முதல் சுற்றில் தோல்வியைச் சந்தித்த அந்தச் சிறுமி, தன் நாட்டுக்காக சாதிக்க வேண்டும் என்ற உறுதியுடன் தொடர்ந்து 9 போட்டிகளில் வெற்றி பெற்றது வெறும் திறமையால் மட்டும் சாத்தியமில்லை.

இரும்பு மனம், விடா முயற்சி, அசைக்க முடியாத நம்பிக்கை, இவை அனைத்தையும் ஒருங்கி ணைத்தே அந்தச் சிறுமி இந்த உயரத்தை எட்டினார்.

ஏழ்மையில் துளிர் விட்ட திறமை அரியலூர் மாவட்டம், உடையார் பாளையத்தைச் சேர்ந்த ஷர்வானி காவின் குடும்பம் எளிய பின்னணியைக் கொண்டது.

தந்தை பி.சரவணன் ஒரு நெசவாளர், தாய் பி.அன்பு ரோஜா ஒரு இல்லத்தரசி

. கொரோனா காலத்தில் மூத்த சகோதரனுடன் துணைக்காக விளையாட ஆரம்பித்த ஷர்வானிகா, மூன்றரை வயதிலேயே சதுரங்கத்தில் ஈர்க்கப்பட்டார்.

மூத்த சகோதரி ஏ.எஸ்.ரட்சிகாவும் ஒரு சதுரங்க வீராங்கனை என்பது, இந்தக் குடும்பத்திற்கு சதுரங்கம் ரத்தத்தில் ஊறிய விளையாட்டு என்பதற்கு சான்று.

சாதனைகளின் பாதை 2ஆம் வகுப்பு படிக்கும்போதே 2022 ஆம் ஆண்டு 7 வயதுக்குட்பட்டோ ருக்கான தேசிய சாம்பியன்ஷிப்பில் 11 போட்டிகளிலும் வென்று அசத்தினார்.

மாநில அளவில் 8 மற்றும் 9 வயது பிரிவுகளிலும், ஆசிய பள்ளி சாம்பி யன்ஷிப்பிலும் வெற்றி வாகை சூடினார்.

இந்த உலக சாம்பியன் பட்டத்துடன் அவரது மதிப்பீடு 2049 என்ற உச்சத்தை எட்டியுள்ளது.

பல ஆசிய மற்றும் காமன்வெல்த் தங்கப்பத க்கங்களும் அவரது சாதனைகளோடு இணைந்திருக்கின்றன.

பயிற்சியும் விடாமுயற்சியும் இந்த வெற்றிகளின் பின்னே ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட பத்து மணிநேர பயிற்சி இருக்கிறது.

ஆரம்பத்தில் அரியலூரில் சசிகுமாரிடம் பயிற்சி பெற்றார்.

பிறகு திருத்தங்கல் ஹட்சன் சதுரங்க அகாடமியில் ஜி.எம். விஷ்ணு பிரசன்னா மற்றும் கணேஷ் வழிகாட்டி னர்.

பெரிய போட்டிக்கு முன்பு கண் களைக் கட்டிக்கொண்டு தனது நகர்வு களை மனதில் ஒத்திகை பார்ப்பது அவ ரது தனிப்பட்ட பயிற்சி முறை.

இது நினைவாற்றலையும் கவனத்தையும் தீட்டுவதாகவும், சதுரங்கப் பலகை யின் மன மாதிரியை மூளையில் பதிக்கும் வழியாகவும் அவர் நம்புகிறார். கனவும் உறுதியும் தங்கப்பதக்கத்துடன் தில்லி வழியாக சென்னை விமானநிலை யத்தை அடைந்தபோது, ஷர்வானிகா வை எதிர்பார்த்திருந்தது உற்சாகமான வரவேற்பு

. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பூங்கொத்துகளுடன், பாரம்பரி யமான பொன்னாடை போர்த்தப்பட்டு வழங்கிய வரவேற்பு, வெறும் சடங்காக இல்லாமல் ஒரு சின்னஞ்சிறு வீராங்க னைக்கான மாநிலத்தின் அன்பின் வெளிப்பாடாக அமைந்தது.

தன் வெற்றியின் பெருமிதத்தை எளிமை யாக பகிர்ந்து கொண்ட இந்த சிறுமி, அன்றைய துணை முதலமைச்சரும் இன்றைய எதிர்க்கட்சித் தலைவரு மான உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து தன்னை ஊக்கப்படுத்துவதாகவும் தெரி வித்த வார்த்தைகள், ஒரு விளை யாட்டு வீராங்கனைக்கு அரசின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தியது.

தமிழகத்தின் ஒவ்வொரு சதுரங்க ஆர்வலரையும் போலவே, ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வ நாதன் ஆனந்தால் ஈர்க்கப்பட்டுள்ளார்.

“56 வயதிலும் இளைஞர்களுக்குக் கடு மையான போட்டி அளிக்கும் அவரது ஒழுக்கம் என்னை உந்துகிறது,” என்று அவர் பகிர்கிறார். “2027-க்கு முன்பு சர்வதேச மாஸ்டர் பட்டம் என்னுடைய தாக வேண்டும்.

மிக இளம் வயதில் மகளிர் உலக சதுரங்க சாம்பியன் ஆவ தே என்னுடைய இறுதிக் கனவு,” என்று தெளிவாகச் சொல்கிறார்.

“என் மீதான என் குடும்பத்தினரின் நம்பிக்கை தான் என்னை தொடர்ந்து முன்னேற வைக்கிறது,” என்று கண்கலங்கி கூறும் அவர், “உங்கள் அன்றாட வழக்கத்தை ஆர்வத்துடன் பின்பற்ற ஒழுக்கத்துடன் இருங்கள்.

மற்ற எதையும் விட நிலைத் தன்மைதான் முக்கியம்,” என்று இளைஞர்களுக்கு வழிகாட்டும் வார்த்தைகளில் விடைபெறுகிறார்.

முன்னாள் உலக சாம்பியன் விளாடி மிர் கிராம்னிக், இந்தியா சதுரங்கத்தின் அடுத்த உலக வல்லரசாக மாறும் என்று கணித்திருக்கிறார்.

ஷர்வானிகா போன்ற எளிய பின்னணியிலிருந்து வரும் திறமைகளே அந்தக் கனவுக்கு உயிர்நாடியாக இருக்கின்றன.

ஏழ்மையின் நடுவே பூத்த இந்தத் திற மைக்கு, அரசின் ஆதரவால் கனவுகள் நனவாகும் வழிக்கும், ஷர்வானிகாவின் வெற்றி என்றும் உயிருள்ள சான்றாக நிலைத்திருக்கும். - சி.ஸ்ரீராமுலு

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.