முந்தய பக்கம்

அரியலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

8 Apr 2026, 5:30 am
அரியலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அரியலூர் தொகுதியில் திமுக வேட்பாளர்கள் மனு ஏற்பு

அரியலூர், ஏப். 7- அரியலூர் சட்டமன்றத் தொகுதியில், 24 வேட்பாளர்கள் 26 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை செவ்வாயன்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அரியலூர் கோட்டாட்சியரும், அரியலூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான த. பிரேம், மனுக்களைப் பரிசீலனை செய்து வெளியிட்டார். இதில் பிரதான கட்சி களின் வேட்பாளர்களான வத பானு (திமுக), தாமரை எஸ். ராஜேந்திரன் (அதிமுக) உள்ளிட்ட மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுயேட்சை வேட்பாளர்களான விஜயகுமார் மற்றும் செல்வதி ஆகிய இருவரின் மனுக்கள், 10 பேர் முன்மொழிய இல்லை என்ற குறைபாடு இருந்ததால் தள்ளுபடி செய்யப்பட்டது. வேட்பு மனு பரிசீலனை இறுதியில் 26 மனுக்களில், 8 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 18 வேட்பாளர்கள் தற்போது களத்தில் உள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram