தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

உயிரிழந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக! அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை

5 Oct 2026, 9:02 pm
உயிரிழந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக!  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை

உயிரிழந்த 3 தொழிலாளர் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குக! அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சிபிஎம் போராட்டம்! போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குண்டுக்கட்டாகக் கைது

அரியலூர், அக். 5அரியலூர் மாவட்டம் செந்துறையில் சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் செப்டிக் டேங்கிற்குக் கான்கிரீட் போட்டு, அதற்காக அடிக்கப்பட்ட பலகைகளை அகற்றும் பணியில் கடந்த அக்டோபர் 2ஆம் தேதியன்று ஈடுபட்ட திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன் (60), பாஸ்கர் (45) மற்றும் செந்துறை காந்தி நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் (48) ஆகிய மூவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வலியுறுத்தி கடந்த இரண்டு நாட்களாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டக்காரர்களுடன் மாவட்ட நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும், உயிரிழந்த குடும்பங்களுக்குத் தலா ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் உயிரிழந்தோரின் குடும்பத்தினரும் போலீசாரின் தடுப்புகளை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளே நுழைந்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

இதனை அடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று காவல்துறை வாகனத்தில் ஏற்றித் தனியார் மண்டபத்தில் சிறைவைக்க முயன்றனர். ஆனால், வாகனத்திலிருந்து இறங்க மறுத்து அவர்கள் வாகனத்திலேயே தொடர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 3ஆவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது.

இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம்.இளங்கோவன் தலைமையில், சிபிஎம் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளரும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் முன்னாள் மாநில துணைத் தலைவருமான கோவி.வெற்றிச்செல்வன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி. லெனின், பி. துரைசாமி, கே. கிருஷ்ணன், எஸ். ரேணுகா, துரை. அருணன், ஏ. கந்தசாமி, மூத்த நிர்வாகி சிற்றம்பலம், சிஐடியு நிர்வாகி ஜெ. சண்முகம், செந்துறை வட்டச் செயலாளர் கு. அர்ச்சுணன், திருமானூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி. துரைசாமி, தா.பழூர் ஜெ. ராதாகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி. பத்தாவதி, அருணாச்சலம், ஆர். ரவீந்திரன், செண்பகவள்ளி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், பலியான ராமச்சந்திரனின் மனைவி வளர்மதி மற்றும் அவர்களது 2 மகன்கள், பலியான தினகரனின் மருமகன்கள், மகள்கள் மற்றும் உறவினர்கள், பாஸ்கரின் உறவினரான புருஷோத்தமன் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர். (ந.நி.)

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.