முந்தய பக்கம்

அரசு இசைப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து தேவார பாடல் பாடிய மாவட்ட ஆட்சியர்'

28 Jun 2026, 11:26 pm
அரசு இசைப்பள்ளி  மாணவர்களுடன் சேர்ந்து  தேவார பாடல் பாடிய மாவட்ட ஆட்சியர்'
<p><strong>அரசு இசைப்பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து தேவார பாடல் பாடிய மாவட்ட ஆட்சியர்&#39;</strong></p><p>அரியலூர், ஜுன் 28- அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், பிரகதீஸ்வரர் ஆலய வளாகத்தில் உலக நாட்டிய தின விழா நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி உள்ளிட்ட பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து, திருச்சி மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் செவ்வியல் மற்றும் கிராமிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி மாணவர்கள் தேவார பாடலை பாடினர். இதில் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி, இசைப்பள்ளி மாணவர்களுடன் தேவார இசை பாடலை பாடினார். இதனையடுத்து, தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு பகுதியில் இருந்து உலக நாட்டிய தின விழாவில் கலந்து கொண்ட பரதநாட்டிய கலைஞர்களின் கண்கவர் பரதநாட்டிய கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram