முந்தய பக்கம்

காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் ஆய்வு

5 Jun 2026, 10:53 pm
காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் ஆய்வு
<p><strong>காலை உணவுத் திட்ட செயல்பாடுகள் ஆய்வு</strong></p><p>அரியலூர், ஜுன் 5- அரியலூரை அடுத்த வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவு திட்ட செயல்பாடுகளை ஆட்சியர் ந. மிருணாளினி பார்வையிட்டு ஆய்வு செய்தார். உணவு தயார் செய்யும் சமையல் கூடம், சமையல் பொருள்களின் இருப்பு விவரம், மாணவர்களுக்கான குடிநீர் வசதிகள், பள்ளிக்கு வருகை தந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை விவரம், அவர்களுக்கு உணவு வழங்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட துடன், மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து காலை உணவு உட்கொண்டு உணவின் தரம், சுவை மற்றும் வழங்கப்படும் வசதிகள் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து, வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ - மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்களை வழங்கினார். முன்னதாக, அவர் ராவுத்தன்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் செயல்ப டுத்தப்படும் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், அரியலூர் வட்டாட்சி யர் தேவகி மற்றும் பள்ளி தலைமை யாசிரியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram