அரியலூரில் 175 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு
21 Jul 2026, 9:20 pm
<p><strong>அரியலூரில் 175 தீக்கதிர் சந்தாக்கள் ஒப்படைப்பு</strong></p><p>அரியலூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், தா. பழூர், ஆண்டிமடம் உள்ளிட்ட 6 தாலுகா - ஒன்றியக்குழுக்களில் சேகரிக்கப்பட்ட 175 தீக்கதிர் சந்தாக்கள், தீக்கதிர் திருச்சி பதிப்பு பொறுப்பாளர் ஐ.வி. நாகராஜனிடம் ஒப்படைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள் எம். இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மணிவேல், பி. துரைசாமி, ஏ. கந்தசாமி, வி. பரமசிவம், எம். வெங்கடாசலம், வட்ட, ஒன்றியச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். தா.பழூர் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.</p>
