சென்னை விரைவு செய்திகள்
30 Mar 2026, 4:56 pm

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனுத்தாக்கலின் போது போலீசாருடன் வாக்குவாதம்

ராணிப்பேட்டை, மார்ச் 30- ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி யில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தாரிக்கா சல்மான் திங்களன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின் போது போலீசாருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட அடுத்தடுத்த வாக்குவாதங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. முன்னதாக, தாரிக்கா சல்மான் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை பேரணி யாகச் செல்ல முயன்றனர். இதற்கு முன் அனுமதி பெறவில்லை எனக் கூறி போலீசார் தடுத்ததால் முதற்கட்ட வாக்குவாதம் ஏற்பட்டது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, தேர்தல் விதிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுடன் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை நெருங்கியபோது, தேர்தல் விதிகளின்படி கட்சி அடையாளத் துண்டுகளை அணிந்து வரக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதனை ஏற்க மறுத்த வேட்பாளர் மற்றும் கட்சியினர், அலுவலகப் படிக்கட்டுகளில் அமர்ந்து அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியில், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி விதிமுறைகளைப் பின்பற்றி தாரிக்கா சல்மான் தனது வேட்புமனுவைச் சமர்ப்பித்தார்.

மின்வேலியில் சிக்கி தம்பதி பலி

காஞ்சிபுரம், மார்ச் 30- காஞ்சிபுரம் அருகே யுள்ள விஷார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கன்னி யப்பன் (75) மற்றும் அவ ரது மனைவி ராணி (68) ஆகியோர், தங்களது வாழைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரி ழந்தனர். சனிக்கிழமை மாலை தோட்டத்திற்குச் சென்ற இவர்கள் வீடு திரும்பாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை பாலுசெட்டிசத்திரம் போலீ சார் நடத்திய தேடுதல் வேட்டையில் இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். காட்டுப்பன்றிகளிட மிருந்து பயிர்களைப் பாது காக்க, அருகிலுள்ள பம்ப் செட் மோட்டாரிலிருந்து சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து இந்த மின்வேலி அமைக்கப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்பதி யினரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டவிரோத மின்வேலியை அமைத்தது யார் என்பது குறித்துப் போலீ சார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கம் விலை உயர்வு

சென்னை,மார்ச் 30- சென்னையில் ஆப ரணத்தங்கம் விலை கிரா முக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.13,600க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.1,08,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.