கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
19 Feb 2026, 3:09 pm

குடிநீர் கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

உதகை, பிப்.19- முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலி யுறுத்தி மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள், பேச்சு வார்த்தை நடத்திய நகராட்சி அதிகாரிகளிடம் வாக்குவாதத் தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சியிலுள்ள 36 வார்டு களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அதேபோல தினசரி 10 ஆயிரம் சுற்றுலாப் பய ணிகள் வந்து செல்கின்றனர். இதனால் குடிநீர் தேவை அதிக ளவு உள்ளது. உதகைக்கு தேவையான குடிநீரில் 70 சதவீதம் பார்சன்ஸ் வேலி அணையில் இருந்தும், மீதம் கோரிசோலா உளளிட்ட சிறிய அணைகளில் இருந்தும் கிடைக்கிறது. சில நேரங்களில் லாரிகள் மூலமும் குடிநீர் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது. இந்நிலையில், 17 ஆவது வார்டுக்குட்பட்ட கெல்ஸ் ஹவுஸ் சாலை பகுதியில் கடந்த 2 வாரமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த பொதுமக்கள் புதனன்று காலிக்குடங்களு டன் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர். இதுகுறித்து தகவலறிந்து பேச்சுவார்த்தை நடத்த வந்த நகராட்சி அலுவ லர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, விரைவில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக நகராட்சி அலுவலர்கள் உறுதியளித்ததன்பேரில், பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ரமலான்: பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிப்பு துவக்கம்

திருப்பூர், பிப்.19 - ரமலான் மாதம் துவக்கத்தை தொடர்ந்து திருப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக் கும் பணி வியாழனன்று முதல் துவங்கியுள்ளது. ரமலான் மாதம் பிப்.19ஆம் தேதி முதல் தொடங்கியது. நாள் முழுவதும் உணவை தவிர்த்து நோன்பு இருக்கும் மக்க ளுக்கு, மாலையில் நோன்பு திறப்பதற்காக பள்ளிவா சல்கள் சார்பில் நோன்புக் கஞ்சி வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி வாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்கும் பணி வியாழனன்று முதல் துவங்கியது. மாநகரில் உள்ள பெரிய பள்ளிவாசல், பெரியதோட்டம் பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளிவாசல்களில் அதி காலை முதலே தன்னார்வலர்கள் மற்றும் சமையல் கலை ஞர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மாலையில் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி, சாதி மத வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்க ளுக்கும் இந்தக் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது. இதற் காக பள்ளிவாசல் நிர்வாகங்கள் சார்பில் தேவையான முன் னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வரும் மார்ச் 31 ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அது வரை ஒவ்வொரு நாளும் பள்ளிவாசல்களில் கஞ்சி தயாரிக் கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும். ரமலான் மாதத்திற்காக தமிழக அரசு சார்பில் பள்ளிவாசல்களுக்குத் தேவையான பச்சரிசி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப் பிடத்தக்கது.

கொள்ளை: போலீஸார் விசாரனை

திருப்பூர், பிப்.19- தாராபுரம்-பொள்ளாச்சி சாலை, கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (65). இவரது மனைவி பாலாமணி (56). இத்தம்பதி அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்ற னர். இந்நிலையில் கோவிந் தசாமி வீட்டில் புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் 5 பேர் கொண்ட கும்பல் நுழைந்து, இருவரையும் தாக்கிவிட்டு 7 பவுன் நகை மற்றும் பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகி யவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றது. இதுகுறித்து தாராபுரம் போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர்.

சுயஉதவிக் குழு பொருட்களுக்கு மண்டல அளவில் வணிக

சந்திப்பு திருப்பூர், பிப்.19 – திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவில் மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்க ளுக்கான வணிக சந்திப்பு திருப்பூர் - அவினாசி சாலை திரு முருகன் பூண்டி அருகில் பாப்பீஸ் விஸ்டா ஹோட்டல் வளா கத்தில் திங்களன்று நடைபெறுகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை வாய்ப்பிற்காக காட்சிப்படுத்தப்பட உள்ளது. இச்சந்திப்பில் வணிகர் சங்கங்கள், மொத்த கொள் முதல் செய்பவர்கள், ஏற்றுமதியாளர்கள் மொத்த விற்பனை யாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் உள்ளிட்ட பல் வேறு தொழில் நிறுவனங்கள் மண்டல அளவில் உற்பத்தி செய்த மகளிர் சுயஉதவிக்குழுப் பொருட்களை கொள்முதல் செய்து பயனடையலாம் என்று மாவட்ட ஆட்சியர் மனிஷ் நார ணவரே தெரிவித்துள்ளார்.

ஊத்துக்குளி ஆர்எஸ் வழியாகப் பேருந்து வராவிட்டால் சிறைப் பிடிக்கும் போராட்டம்: சிபிஎம் எச்சரிக்கை

திருப்பூர், பிப். 19 - அனைத்துப் பேருந்துகளும் ஊத் துக்குளி ஆர்.எஸ். வழியாக இயக்கப் படும் என அலுவலர்கள் உறுதி அளித் தும் பேருந்துகள் அங்கு வராமல் செல்கிறது. இதற்கு உடனடியாக நட வடிக்கை எடுக்காவிட்டால் பேருந்தை சிறைப் பிடித்துப் போராட் டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரி வித்துள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஊத்துக்குளி தாலுகா செயலா ளர் கு.சரஸ்வதி மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அலுவ லர்களுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருப்பூர் முதல் ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் பொள்ளாச்சி, உடு மலை போன்ற பகுதிகளுக்கு இயக் கப்படும் பேருந்துகள் கடந்த காலங்க ளில் ஊத்துக்குளி இரயிலடி (ஆர்.எஸ்.) வழியாகவே முழுமையாக இயக்கப்பட்டு வந்தன. ஆனால், தற் போது பெரும்பாலான பேருந்துகள் கொடியம்பாளையம் நால்ரோடு - கவுண்டம்பாளையம் நால்ரோடு வழி யாகச் செல்வதால், ஊத்துக்குளி ஆர்.எஸ். நிறுத்தத்தில் பயணிகள் பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட் டுள்ளது. குறிப்பாக, காலை 4 மணி முதல் 8 மணி வரை ஈரோட்டில் இருந்தும், காலை 5 மணி முதல் 8 மணி வரை திருப்பூரில் இருந்தும் இயக்கப்படும் பேருந்துகள் இப்பகுதியை முழு மையாகப் புறக்கணிக்கின்றன. இத னால் பள்ளி, கல்லூரி மாணவர் கள் மற்றும் வேலைக்குச் செல்ப வர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகின் றனர். பேருந்து வராததால், கூடுதல் செலவு செய்து ஆட்டோ மற்றும் தனி யார் வாகனங்கள் மூலம் ஊத்துக் குளி வரை சென்று பேருந்து ஏற வேண்டிய நிலை உள்ளது. ஊத்துக் குளி ஆர்.எஸ். என்பது ஊராட்சி ஒன்றி யத்தின் மையப் பகுதியாகும். இங்கு இரயில் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், நீதிமன்றம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் என முக்கிய அரசு அலுவலகங்கள் அனைத்தும் உள்ளன. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகு தியை பேருந்து ஓட்டுநர்களும், நடத் துநர்களும் திட்டமிட்டுத் தவிர்ப்பது மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே போராட்டங்கள் நடத் தப்பட்டு, அனைத்துப் பேருந்துக ளும் ஊத்துக்குளி ஆர்.எஸ்.வழியாக இயக்கப்படும் என்று போக்குவ ரத்துத் துறை அதிகாரிகள் முன்னி லையில் உறுதி அளிக்கப்பட்டிருந் தது. ஆனால், அந்த உறுதிமொழி தற் போது மீறப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகமும் போக்குவ ரத்துத் துறையும் உடனடியாக தலை யிட்டு, அனைத்துப் பேருந்துகளும் ஊத்துக்குளி ஆர்.எஸ். வழியாகச் செல்வதை உறுதி செய்ய வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால், பொது மக்களைத் திரட்டி சாலை மறியல் மற்றும் பேருந்து சிறைபிடிப்புப் போராட்டங்கள் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்திய யானைகள்

ஈரோடு, பிப்.19- தாளவாடி அருகே வனப்பகுதியிலிருந்து வெளி யேறிய யானைகள், விவசாய நிலத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்த கிரா மங்களில் கடந்த சில நாட்களாகவே வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள், விளை நிலங்க ளுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருவது தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில், சத்தியமங் கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சேஷன் நகர் கிரா மத்தில் விஜயகுமார் என்பவர் தனது விவசாய நிலத் தில் நூற்றுக்கணக்கில் தென்னை, வாழைகளை பயி ரிட்டுள்ளார். அவைகள் நன்கு வளர்ந்திருந்த நிலை யில், வனப்பகுதியையொட்டி விளைநிலம் இருப்ப தால் இரவு நேரத்தில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புத னன்று இரவு வனத்திலிருந்து வெளியேறிய யானை கள், விஜயகுமாரின் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகளை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து, 100க்கும் மேற்பட்ட வாழை மற்றும் தென்னை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்ப டுத்தியது. இதன்பின் விவசாயிகள் ஒருங்கிணைந்து யானைகளை விரட்டியடித்தனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஒரு வாரமாக யானைகள் வனப்பகுதியிலி ருந்து வெளியேறி எங்கள் கிராமத்துக்குள் புகுந்து, தொடர்ந்து தென்னை, வாழை மரங்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன. கிட்டத்தட்ட இந்த ஒரு வாரத்தில் மட்டும் 500க்கும் மேற்பட்ட தென்னை, வாழை மரங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் எங் கள் பகுதி விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ள னர். எனவே, உடனடியாக நஷ்டமடைந்த விவசாயிக ளுக்கு உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும், என்றனர்.

பெண்ணிடம் ரூ.25 லட்சம்

மோசடி உதகை, பிப்.19- கோத்தகிரியை சேர்ந்த பெண்ணிடம் 2 ஆவது திருமணம் செய்வதாகக்கூறி, ரூ.25 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள் ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரியைச் சேர்ந்த 45 வயது பெண்ணுக்கு திருமணமாகி, 2 மகள்கள் உள்ள னர். இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் இங்கி லாந்தில் வசிப்பதாகக்கூறிய ஒருவர், ‘பர்மடோ எரிக்’ என்ற பெயரில் அந்த பெண்ணை தொடர்பு கொண்டுள் ளார். இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில், அந்த நபர் 2 ஆவது திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். தொடர்ந்து, நேரில் பார்ப்பதற்காக இங்கி லாந்திலிருந்து வந்துள்ளதாகவும், அதிகளவில் தங்கக்கட்டிகளை கொண்டு வந்ததால் தில்லி விமான நிலையத்தில் சிக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள் ளார். மேலும், பல்வேறு காரணங்களைக்கூறி, அந்த பெண்ணிடமிருந்து பல தவணைகளில் ரூ.25 லட்சம் பெற்றுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த பெண் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, போலி ஆவணங் கள் மற்றும் தகவல்கள் மூலம் பெண்ணை ஏமாற்றி, பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இச்சம்ப வம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர், சமூக வலைதங்களில் அறிமுக மாகும் நபர்களை எளிதில் நம்பி ஏமாற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

அரசு - தனியார் பேருந்துகள் மோதல்

ஈரோடு, பிப்.19- பெருந்துறை அருகே தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில், 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். கோவையிலிருந்து ஈரோடு வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து புதனன்று காலை சென்றது. பேருந்தை பவானி, சித்திரை நகரை சேர்ந்த கலைய ரசன் (44) என்பவர் ஓட்டிச் சென்றார். இதேபோன்று, திருப்பூரிலிருந்து ஈரோடு நோக்கி தனியார் பேருந்து சென்றது. இதனை சேலம் மாவட்டம், பெரியம்பட் டியை சேர்ந்த முருகன் (45) என்பவர் ஓட்டிச் சென்றார். பெருந்துறை - ஈரோடு சாலை, வாய்க்கால் மேடு அருகே முன்னால் சென்ற அரசுப் பேருந்து திடீரென நின்றதால், பின்னால் வந்த தனியார் பேருந்து, அரசுப் பேருந்தின் பின்னால் மோதியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளிலும் பயணம் செய்த 20க்கும் மேற் பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து அக் கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகே உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பெருந்துறை காவல் துறையி னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலை வாங்கித்தருவதாகக் கூறி மோசடி தாய், மகன் நேரில் ஆஜராக உத்தரவு

ஈரோடு, பிப்.19- வெளி நாடுகளில் வேலை வாங்கித்தருவதாக பணம் வசூல் செய்து மோசடி செய்த வழக்கில், தப்பியோடிய தாய், மகன் இருவரும் நேரில் ஆஜ ராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு, பெருந்துறை சாலை பகுதியை சேர்ந்தவர் சூர்யா (எ) ரமேஷ்சந்தர் (40). இவர் சிங்கப்பூர் உட்பட வெளிநாடுகளிலுள்ள நிறுவனங்களில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறியுள்ளார். இதை நம்பிய 8 பேர், ரமேஷ்சந்தர் மற்றும் அவரது தாய் அமிர்தவள்ளி ஆகியோரிடம் ரூ.21 லட்சத்து 83 ஆயிரம் கொடுத்துள் ளனர். ஆனால், அவர்கள் வேலை வாங்கி கொடுக்கா ததால், பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டுள்ளனர். ஆனால், தாயும், மகனும் பணத்தைக் கொடுக்காமல் கால தாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலை யத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு புகாரளித்தனர். இந்நிலையில், இந்த மோசடி வழக்கில் தப்பியோடிய ரமேஷ்சந்தர், அவரது தாய் அமிர்த வள்ளி ஆகியோர், ஈரோடு குற்றவியல் நீதித்துறை நடு வர் நீதிமன்றம் எண்:2 இல் மார்ச் 18 ஆம் தேதிக்குள் ஆஜராக வேண்டும். தவறும்பட்சத்தில் 2 பேரும் தலை மறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவர் என்றும் நீதித்துறை நடுவர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தற்காலிக ஒருங்கிணைந்த புளி வணிக மையம் திறப்பு

தருமபுரி, பிப்.19- தருமபுரியில் தற்காலிக ஒருங்கி ணைந்த புளி வணிக மையம் சனி யன்று (நாளை) திறக்கப்படவுள்ள தாக மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு ஆக.17 ஆம் தேதி யன்று தருமபுரி மாவட்டத்தில் நடை பெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு முதல்வர், தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக் கும் வகையில் ரூ.11.30 கோடி மதிப் பில் ஒருங்கிணைந்த புளி வணிக மையம் அமைக்கப்படும் என அறி வித்தார். இந்தியாவின் புளி உற்பத்தி யில் 25 சதவிகிதத்திற்கும் மேலாக தமிழ்நாடு, பங்காற்றுகிறது. அதில் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட் டங்கள் ஆண்டுக்கு சுமார் 20,570 மெட்ரிக் டன் புளி உற்பத்தி செய்து, முக்கிய பங்களிப்பை வழங்குகின் றன. முதல்வரின் அறிவிப்பை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், செல்லியம்பட்டி கிராமத்தில் ஒருங்கி ணைந்த புளி வணிக மையத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்காலிக மாக புளி வணிக மையத்தை, தரும புரி ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் சனியன்று (நாளை) வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் திறந்து வைக்கவுள்ளார். புதிய புளி வணிக மையம் அமைக்கப்படும் வரை காத்திருக்காமல், புளி விவ சாயிகள், பதப்படுத்துபவர்கள், உழ வர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் சிறு வியாபாரிகள், புளி விளைபொருளை தருமபுரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து தேசிய வேளாண் சந்தை முறை யில் வணிகம் செய்து பயன்பெற்றுக் கொள்ள தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. புளி சேமிப்பு, செயலாக்கம் மற் றும் விற்பனைக்கு நவீன வசதிகளை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு எளிய முறையில் சந்தை அணுகல் மற்றும் விலை உயர்வு வாய்ப்புகளை வழங் குவதால் அதிக வருமானம் ஈட்ட வழி வகை செய்யப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு 7.5 சதம் பரிவர்த்தனைச் செலவு சேமிக்கப் படுவதுடன், 10 ஆயிரத்திற்கும் மேற் பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு நேரடி/மறைமுக நன்மைகள் கிடைக்க வழி வகை செய்யப்படுகிறது. மேலும், விதையற்ற புளி கேக், புளி விழுது, இயற்கை புளி போன்ற மதிப்பேற்றப் பொருட்களின் உற்பத்தி, ஏற்றுமதி மேம்பாடு அடைவதால் அரசிற்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2 கோடி கூடு தல் வருவாய் கிடைக்கும். இத்திட்டத் தின் மூலம் புளி உற்பத்தி செய்யக்கூ டிய விவசாயிகள், புளி ஏற்றுமதியா ளர்கள், விவசாயத் தொழில் முனை வோர்கள் மற்றும் புளி சார்ந்த தொழில் மேற்கொண்டுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன டைவர். விளைபொருளுக்கான ஆயுட் காலத்தை நீட்டித்து, நல்ல விலை கிடைக்க செய்வதன் மூலம் லாபத்தை அதிகரிக்கச் செய்யப்படும் என ஆட்சி யர் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளார்.

கடைகளுக்கு சீல்

தருமபுரி, பிப்.19- தருமபுரி மாவட்டம், பென் னாகரம் அருகே உள்ள பகு திகளிலுள்ள பெட்டிக்கடை களில் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் நந்தகோ பால் தலைமையில் புத னன்று சோதனை மேற் கொள்ளப்பட்டது. அதில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதைய டுத்து, நான்கு கடை உரிமை யாளர்களுக்கு ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து, ‘சீல்’ வைத் தனர். இதுபோன்ற செயல்க ளில் ஈடுபட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுக்கடைக்கு எதிராக பொதுமக்கள் மறியல்

கோவை, பிப்.19- வெள்ளலூர் எல் அண்ட் டி புறவழிச்சாலை அருகே புதிதாகத் திறக்கப்பட உள்ள மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், வெள்ளலூர் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய எப்.எல்.2 (FL2) மதுபானக் கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இதற்கு அப்பகுதி மக்கள் ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், வியாழனன்று திரண்ட பொதுமக்கள் கடைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதனைத் தொடர்ந்து, அங்கிருந்து ஊர்வலமாகச் சென்ற பொதுமக்கள் எல் அண்ட் டி புறவழிச்சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த முக்கியச் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவ லறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டக்காரர் களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடையை மூடுவ தற்கு தேவையான அனைத்து சட்டப்பூர்வ முயற்சிகளையும் எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்ற னர். இந்தப் போராட்டத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

நெரிசலை தவிர்க்க சாலை விரிவாக்கம் தேவை

நாமக்கல், பிப்.19- குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் தினமும் காலை மற்றும் மாலையில் தனியார் மில் வாகனங்கள், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களால் கடும் போக்குவ ரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதால், இந்த சாலையை விரிவாக்கம் செய்திட பொதுமக் கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர் கள் கூறுகையில், குமாரபாளையம் - எடப்பாடி சாலையில் தினசரி காலை 7 மணி முதல் 9.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் 6:00 மணி வரை தனியார் மில் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் சென்று வருகின்றன. ஒரு சில நேரங்களில் அனைத்து வாகனங்களும் ஒன்றாக வருவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குமார பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து, இடைப்பாடி சாலை, குமாரபாளையம் எல் லைப்பகுதியான ஐயம்பாளையம் வரை சாலையை விரிவாக்கம் செய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கை யும் இல்லை. நெடுஞ்சாலைத் துறையினர் அலட்சியப் போக்கால் தினசரி வேலைக்கு செல்வோர் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல் வோர் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இத னால் விபத்துகளும் அடிக்கடி ஏற்படுகிறது. எனவே உடனடியாக நெடுஞ்சாலைத் துறை யினரும் தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து இந்த எடப்பாடி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், என்றனர்.