பட்டாவை பதிவேற்ற அழைக்கழிப்பு கிராம சபையில் வாக்குவாதம்
27 Jan 2026, 3:28 pm
<p><strong>பட்டாவை பதிவேற்ற அழைக்கழிப்பு கிராம சபையில் வாக்குவாதம்</strong></p>
<p>கோபி, ஜன.27- அரசு வழங்கிய பட்டாவை ஆன்லைனில் பதி வேற்றம் செய்ய வருவாய்த்துறை அலுவலர்கள் அழைக்கழிப்பதாகக்கூறி, கிராம சபைக்கூட்டத்தில் அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் ஊராட்சியில், ஊராட்சி செய லர் ராஜாமணி தலைமையில் கிராம சபைக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. அப்போது மொடச்சூர் ஊராட்சிக்குட்பட்ட வடுகபாளையம் பகுதி பொதுமக் கள், தங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாவை ஆன்லை னில் பதிவேற்றம் செய்யாததால் புதிய வீடு கட்ட முடிய வில்லை. மேலும், அதிகாரிகள் தங்களை அழைக் கழிக்கின்றனர் எனக்கூறி, அலுவலர்களை முற்றுகை யிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமார் ஒரு மணி நேரம் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத் திய அலுவலர்கள், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். மேலும், 100 நாள் வேலைக்கு ஊதி யம் வழங்கி, மூன்று மாதங்களுக்கு மேல் ஆவதால், உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.</p>
