பந்தயத்தில் முந்துவது யார்?
18 Jul 2026, 9:30 pm

பந்தயத்தில் முந்துவது யார்?

இறுதிப் போட்டியில் அசத்தலாக விளையாடி இந்த அணிதான் கோப்பை கைப்பற்றும் என உறுதியாக கருத்துக் கூற முடியாது. காரணம் இரு அணிகளும் கணிக்க முடியாதபடி விளையாடி வருகின்றன. பலம், பலவீனம் கூட வேறு மாதிரியாக தான் உள்ளது. எனினும் சில விஷயங்கள் மூலம் யாருக்கு வாய்ப்பு என்பதை காணலாம் :

மெஸ்ஸி படை

மெஸ்ஸி படை தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினா நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் வித்தியா சமாக விளையாடி வருகிறது. பந்தை கடத்தி பம்பரமாக சுழலும் மெஸ்ஸி நாக் அவுட் சுற்றுக்குப் பின்பு, பந்தை கண்டபடி திருப்பி விட்டு அணிக்காக கோலடிக்க உதவி செய்து வருகிறார். குறிப்பாக அர்ஜெண்டினா அணியினர் பய மில்லாமல் விளையாடி வருகின்ற னர். எதிரணி 80ஆவது நிமிடம் வரை கோல் மழையில் முன்னிலையில் இருந்தால் என்ன? பார்த்துக்கொள்ளலாம் என்று, கடைசி நிமிடங்களில் அசராமல் அடுத்தடுத்து கோலடித்து வெற்றியை ருசித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க சண்டையிலும் சரி, கோல டிப்பதிலும் சரி அர்ஜெண்டினா வீரர்கள் பரந்த ஒற்றுமை யுடன் விளையாடி வருகின்றனர். மெஸ்ஸியின் சுய நலமில்லா ஆட்டம் ; வீரர்களின் ஒற்றுமை ; சூப்பர் பார்ம் ; அதிரடி - ஆக்ரோஷம், அனுபவம் - இளமை துள்ள லுடன் கவலையான அணி பட்டாளம் என பல்வேறு பிரம்மாண்டங்களை கொண்டுள்ளதால் அர்ஜெண்டினா நான்காவது (இதற்கு முன்பு 1978, 1986, 2022 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்றது) முறையாக உலகக்கோப்பை வெல்ல சகல வாய்ப்புகளும் உள்ளன.

யமாலின் இளம் படை

யமாலின் இளம் படை ஐரோப்பா கண்ட அணிகளிலேயே மாறுபட்ட ஆட்டத்தை கொண்டது ஸ்பெயின் மட்டுமே. தடுப் பாட்டத்திற்கு பெயர் பெற்ற அணியாக இருந்தாலும், கோலடித்துவிட்டுதான் பின்களத்தை பெரியளவில் பலப் படுத்தும். அதாவது ஒரு கோலடித்து விட்டால் பின்களத்தில் எஃகு கோட்டை அமைத்து எதிரணியை கோலடிக்காமல் செய்துவிடும். நட்சத் திர வீரர் யமால் போன்ற இளம் வீரர்க ளை அதிகம் கொண்ட அணியாக இருப்பதால் பயமில்லாமல் சாகசங்களை செய்து ஆட்டத்தின் போக்கை மாற்றியமைக்கக் கூடும். அதே சமயம் இங்கிலாந்து அணியைப் போலவே கோல டிக்க முயற்சி செய்யாமல் பந்தை 10 நிமிடம் முன் மற்றும் பின்களத்தில் சுழன்றடிக்கும் திறமை ஸ்பெயி னுக்கு உள்ளது. குறிப்பாக எவ்வித சலனமின்றி முன்களம் நோக்கி திடீர் தாக்குதல் நடத்தும் சிறப்பு பெருமையை கொண்டது. நட்சத்திர வீரர்கள் அதிகம் இல்லாவிட்டாலும் சூப்பர் பார்ம் ; வீரர்களின் ஒற்றுமை ; திடமான தடுப்பாட் டம் போன்றவை மூலம் இரண்டாவது முறையாக உல கக்கோப்பை (இதற்கு முன்பு 2010) வெல்லும் படிக் கட்டில் ஸ்பெயின் கம்பீரமாக நிற்கின்றன.