கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு? அர்ஜெண்டினா - ஸ்பெயின் இன்று நள்ளிரவு பலப்பரீட்சை
18 Jul 2026, 9:24 pm

கால்பந்து உலகக்கோப்பை யாருக்கு?

அர்ஜெண்டினா - ஸ்பெயின் இன்று நள்ளிரவு பலப்பரீட்சை

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் ஜுன் 11 அன்று தொடங்கியது. உலகக்கோப்பை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் முதன்முறையாக 48 நாடுகள் பங்கேற்றன. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளின் 16 நகரங்களில் போட்டிகள் நடைபெற்றன. மெக்சிகோ, கனடா நாடுகளில் லீக், நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் மட்டும் நடைபெற்றன. ஆனால் அனைத்து ஆட்டங்கள் (லீக், நாக் அவுட், காலிறுதி, அரை யிறுதி, இறுதி) நடத்தும் பொறுப்பை அமெரிக்கா வலுக்கட்டாயமாக கைப்பற்றிக் கொண்டது. மொத்தம் 104 ஆட்டங்களை கொண்ட இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி முடிவில் பிரான்ஸ் அணியை ஸ்பெயின் அணியும், இங்கிலாந்து அணியை அர்ஜெண்டினாவும் வீழ்த்தி இறுதிக்கு முன்னேறின. இந்நிலையில், 23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று நள்ளிரவு 12:30 மணிக்கு (ஜூலை 20 - அதிகாலை) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் (ஐரோப்பிய சாம்பியன்) ஆகிய அணிகள் உலகக்கோப்பை மகுடத்திற்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளின் ஆடும் லெவன் (சாத்தியமானது)

அர்ஜெண்டினா மெஸ்ஸி (கேப்டன்), மார்டினெஸ் (கோல் கீப்பர்), நஹுவல், ரொமேரோ, லிசாண்ட்ரோ மார்டினெஸ், டாக்லியாபிகோ, மேக் அலிஸ்டர், என்ஜோ பெர்னாண்டஸ், கியூலியானோ சிமியோன், மெஸ்ஸி, ஜூலியன் ஆல்வரேஸ். ஸ்பெயின் ரோட்ரி (கேப்டன்), சைமன் (கோல் கீப்பர்), போரோ, லபோர்டே, குபார்சி, குக்ரெல்லா, ரோட்ரி, பேபியன், யமால், ஒல்மோ, பெயினா, ஒயார்சபால்.

60 ஆண்டுகளுக்கு பிறகு...60 ஆண்டுகளுக்கு பிறகு...

உலகக்கோப்பை வரலாற்றில் ஸ்பெயினும் அர்ஜெண்டினாவும் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே (1966-இல்) நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் அர்ஜெண்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு அர்ஜெண்டினா ஸ்பெயின் அணிகள் உலகக் கோப்பை மோதுகின்றன.

அர்ஜெண்டினா - ஸ்பெயின்

இடம் : நியூயார்க், அமெரிக்கா நேரம் : ஞாயிறு நள்ளிரவு 12:30 மணி சேனல் : ஜீ 5 (ஓடிடி), யுனைட்8 (தொலைக்காட்சி). இறுதிப் போட்டிக்காக ஏர்டெல்லில் சிறப்பு பேக் (ரூ.24) வசதியும் செய்யப்பட்டுள்ளன.