விளையாடு
16 Jul 2026, 9:50 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

கடைசி 7 நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால் பந்து தொடர் வட அமெரிக்க நாடு களான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட் டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வியாழனன்று அதிகாலை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து அணி கள் மோதின. அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. முதல் 10 நிமிடம் இரு அணிகளின் மந்தமான பந்து நகர்த்தலிலேயே நேரத்தை கழித்தது. அடுத்த 2 நிமிடங்களில், அதாவது 12ஆவது நிமிடம் முதல் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்த தொடங்கியது. பல்வேறு கோல் வாய்ப்புக்களை உருவாக்கி, அதிரடி ஷாட்கள் மூலம் இங்கிலாந்து அமர்க்களப் படுத்தியது. அர்ஜெண்டினா அணியும் சில ஷாட்களை விளாசியது. எனினும் முதல் பாதி இரு அணிகளும் கோலடிக்கவில்லை. அனல் பறந்த ஆட்டம் இரண்டாம் பாதியில் இரு அணிகளும் கோல டிக்க தீவிர முயற்சி கொண்டதால் ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. ஆட்டத்தின் 55ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கோர்டன் கோலடித்தார். இந்த கோலுக்குப் பிறகு, அர்ஜெண்டினா அணி கோலடிக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தியது. ஆனால் தேவையில்லா ‘பெனால்டி அவுட் பாக்ஸ் (பெனால்டி பாக்ஸுக்கு வெளியே)’ ஷாட்களால் அர்ஜெண்டினா அணி 80ஆவது நிமிடம் கோலடிக்கவில்லை. இன்னும் 10 நிமிடம் மட்டுமே உள்ளது; தங்கள் நாட்டு வீரர்கள் என்ன செய்யப் போகி றார்கள்? என்று ஏக்கத்துடன் மைதா னத்தில் அர்ஜெண்டினா ரசிகர்கள் காணப்பட்டனர். எனினும் நாக் அவுட் - 16 சுற்றில் நிகழ்ந்தது போல (எகிப்து போட்டி) இந்த போட்டியும் நிறைவடைந்தது. ஆட்டத்தின் 85ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் இளம் வீரர் என்ஜோ பெர்னாண்டஸ் பெனால்டி அவுட் பாக்ஸ் அருகே அதிரடி ஷாட் மூலம் பிரம்மாண்டமாக கோலடித்தார். ஆட்டம் பரபரப்பானது. அடுத்த 5 நிமிடம், அதாவது 90ஆவது நிமிடம் வரை அர்ஜெண்டினாவின் 10 கோலடிக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணானது. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்தை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. மெஸ்ஸி உதவி ஆனால் உதிரி நிமிடத்தில் (90+2’) அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி கொடுத்த அசத்தலான பாஸ் மூலம் எல்.மார்ட்டினஸ் இங்கி லாந்து அணியின் பல்வேறு தடுப்புகளை உடைத்து, தலையால் முட்டி கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு, கடைசி 7 நிமிடத்தில் அடுத்தடுத்து 2 கோல்கள் அடித்த அர்ஜெண்டினா அணி 7ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறியது. 60 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பை வெல்லும் கனவோடு அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி அதிர்ச்சி தோல்வியுடன் தொடரில் இருந்து வெளியேறியது. இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி கோலடிக்கவிட்டாலும் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதாவது கோலடிக்க சுயநலமாக செயல்படாமல் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவர் அணியை வழிநடத்தினார்.

பெனால்டி அவுட் பாக்ஸ் பகுதியில் இடைவிடா தாக்குதல் நடத்திய என்ஜோ பெர்னாண்டஸ்

அர்ஜெண்டினா அணி கோலடிக்கும் முன்பு, அதாவது 80ஆவது நிமிடம் வரை 9க்கும் மேற்பட்ட பெனால்டி அவுட் பாக்ஸ் அடித்தது. அந்த அணியின் முன்கள வீரர் என்ஜோ பெர்னாண்டஸ் 5க்கும் மேற்பட்ட ஷாட்களை விளாசினார். ஆனாலும் பந்து கோல் வலைக்குள் பாயவில்லை. எனினும் என்ஜோ மனம் தளரவில்லை. யாரையும் கண்டுகொள்ளவில்லை. பயிற்சி பெறுவது போல விளையாடி கொண்டு இருந்தார். மெஸ்ஸி அவருக்கு ஆதரவாக ஆலோசனை வழங்கினார். கடைசியாக 85ஆவது நிமிடத்தில் என்ஜோ மீண்டும் தேர்ந்தெடுத்த பெனால்டி அவுட் பாக்ஸ் ஷாட் தான் கோலாக மாறியது. இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனை கோலாக அமைந்தது. ஒரு வீரர் (என்ஜோ) ஒரே மாதிரியாக பெனால்டி அவுட் பாக்ஸ் அருகே மட்டும் கடுமையாக போராடி கோலடித்தது கால்பந்து உலகில் நெகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக சாம்பியன் யார்? ஞாயிறன்று நள்ளிரவு இறுதிப் போட்டி

அர்ஜெண்டினா-ஸ்பெயின்

இடம் : நியூயார்க், அமெரிக்கா நேரம் : நள்ளிரவு 12:30 மணி சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

போக்லேண்ட் தீவு விவகாரம் சர்ச்சையில் சிக்கிய அர்ஜெண்டினா

உலகக்கோப்பை கால்பந்து அரையிறுதியில் இங்கி லாந்தை வீழ்த்திய மகிழ்ச்சியில், அர்ஜெண்டினா வீரர்கள் களத்தில் “மால்வினாஸ் (போக்லேண்ட் தீவுகள்) அர்ஜெண்டினாவுக்கே சொந்தம்” (Las Malvinas son Argentinas) என்ற பதாகையை ஏந்தி கொண்டாடினர். இது கால்பந்து உல கிலும், அரசியல் தளத்திலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள போக்லேண்ட் தீவுகள் இங்கி லாந்தின் கட்டுப்பாட்டில் இருந்தா லும், அது தங்கள் நாட்டுக்குச் சொந்த மானது என்று அர்ஜெண்டினா பல பத்தாண்டுகளாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்தத் தீவுக்காக 1982ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் அர்ஜெண்டினாவுக்கும் இடையே 74 நாட்கள் கடுமையான போர் நடை பெற்றது. இதில் அர்ஜெண்டினா தோல்வியடைந்தது. குறிப்பாக, அரையிறுதி போட்டி க்கு முன்னதாகவே, அர்ஜெண்டினா வின் துணை ஜனாதிபதி விக்டோரியா வில்லருயேல், இங்கிலாந்தை விமர்சித்து இருந்தார். கால்பந்து போட்டிகளில் அரசியல் தொடர்பான பதாகைகள், சின்னங்கள் அல்லது முழக்கங்களை வெளிப்படுத்த சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கடுமையான தடைகளை விதித்துள்ளது. 2014ஆம் ஆண்டும் இதேபோன்ற பதாகையை ஏந்தியதற்காக அர்ஜெண்டினாவுக்கு 20,000 பவுண்டுகள் (ரூ.26,00,000) அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது இந்தச் சம்பவம் குறித்து பிபா அதிகாரப்பூர்வமாக இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. போட்டி நடுவர் அறிக்கைகளைப் பரிசீலித்த பின் பிபா உரிய நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அர்ஜெண்டினா-இங்கிலாந்து வீரர்களுக்கு இடையே கைகலப்புடன் மோதல்

இங்கிலாந்து - அர்ஜெண்டினா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றாலும், இருதரப்பிலும் கைகலப்புடன் மோதல்கள் அதிகம் அரங்கேறின. அர்ஜெண்டினா வீரர்கள் செய்த பல தவறுகளுக்கு நடுவர் இஸ்மாயில் எல்பத் (மொரோக்கோ) மஞ்சள் அட்டை காட்டவில்லை எனக் கூறி இங்கிலாந்து வீரர்கள் கடும் அதிருப்தி யை வெளிப்படுத்தினர். ஆட்டத்தின் 3ஆவது நிமிடத்திலே யே, இங்கிலாந்து வீரர் எலியட் ஆண்டர்சன் மீது அர்ஜெண்டினா வீரர் என்ஜோ பெர்னாண்டஸ் கடுமையான தாக்குதலை நடத்தினார் என்று இரு அணி வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து இங்கிலாந்து வீரர் ஜேட் ஸ்பென்ஸை, அர்ஜெண்டினா வீரர் ஜூலியானோ சிமியோன் முகத்தில் தாக்கியதாக கூறி, இரு அணி வீரர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கிலாந்து நட்சத்திர வீரர் ஜூட் பெல்லிங்ஹாமை பந்து இல்லாத நேரத்தில் அர்ஜெண்டினா வீரர் லியா ண்ட்ரோ பரேடெஸ் தள்ளிவிட்டதாக புகார் எழுந்தது. ஆனால் நடுவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ஜூட் பெல்லிங்ஹாம் - லியாண்ட்ரோ பரேடெஸ் இடையே கைக்கலப்புடன் மோதல் ஏற்பட்டது. இதுதான் பெரிய மோதல். கடைசியாக தோல்வியடைந்த கடுப்பில், ஆட்டம் முடிந்த உடன் ஜூட் பெல்லிங்ஹாம் அர்ஜெண்டினா வீரரை நேரடியாக தாக்குதல் நடத்தி னார். ஆனால், அர்ஜெண்டினா வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த தால், இந்த விஷயம் பெரிதாக வில்லை. இந்த ஆட்டத்தில் மொத்தம் 6க்கும் மேற்பட்ட மோதல் சம்பவங் களுடன் நிறைவு பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.