தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

14 Jul 2026, 9:44 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

இங்கிலாந்தை சாய்த்து இறுதிக்கு முன்னேறுமா அர்ஜெண்டினா? இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு பலப்பரீட்சை

23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடை பெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்திய நேரப்படி புதனன்று நள்ளிரவில் (ஜூலை 16) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - இங்கி லாந்து அணிகள் மோதுகின்றன. இரு அணிகளிலும் அனு பவம் மற்றும் இளம் வீரர்கள் சரிசமமான அளவில் உள்ள னர். இதனால் பொறுப்பான மற்றும் சூழ்நிலைக்கு ஏற்றார் போல ஆட்டம் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஆட்டத்திறனில் இரண்டு அணிகளும் மாறுபட்ட பலம், பலவீனங்களை கொண்டுள்ளது. நாக் அவுட் சுற்றுகளில் திணறலான வெற்றியோடும், காலிறுதியில் அதிரடி ஆட்ட வெற்றியோடும் அர்ஜெண்டினா அரையிறுதிக்கு முன்னேறி யுள்ளது. இங்கிலாந்து போராட்டம் மற்றும் வலுவான ஆட்டம் கலந்த வெற்றியோடு அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளின் ஆட்டத்திறன், பலம் - பலவீனம் மாறுபட்ட நிலையில் இருப்பதால் இந்த ஆட்டத்தில் எந்த நாடு வெற்றி பெறும் என ஆருடம் கூட கூற முடியாது. எனினும் வலுவான பார்ம், போராட்ட குணம், சாம்பியன் அணி, திடீர் தாக்குதல், கடைசிக் கட்ட போராட்டம் என பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ள அர்ஜெண்டினா அணி இறுதிக்கு முன்னேற 20% கூடுதல் வாய்ப்புகளை பெற்றுள்ளது. அதே சமயம் உலகக்கோப்பையை கையிலேந்தி 60 ஆண்டுகள் ஆகிவிட்டது ; இந்த முறையாவது இறுதிக்கு முன்னேறி கோப்பையை வென்றே ஆக வேண்டும் என்ற வேட்கையில் இங்கிலாந்து அணி போராடும் நிலையில் இருப்பதால், அந்த அணியின் கடின உழைப்புக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்று மில்லை. எது எப்படியோ போட்டியின் நகர்வை பொறுத்து தான் வெற்றி, தோல்வியும் உள்ளது.

அர்ஜெண்டினா - இங்கிலாந்து

நேரம் : நள்ளிரவு 12:30 மணி (ஜூலை 16) இடம் : அட்லாண்டா, அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

இரு அணிகளின் வித்தியாசமான ஆட்டத்திறன்

அர்ஜெண்டினா

அதிரடி - ஆக்ரோஷம், சாதுவான - பொறுப்பான என பல வியூக ஆட்டத்திற்கு பெயர் பெற்றது அர்ஜெண்டினா. எந்த அணியாக இருந்தாலும் 20 நிமிடமோ அல்லது முதல் பாதி வரையிலோ,”அவங்க என்ன செய்கிறார்கள்” என உளவு பார்க்கும் பெருமை கொண்ட து அர்ஜெண்டினா, உளவு செய்யும் நேரத்தில் கோல் வாய்ப்பு கிடைத்தால் “டமார்” என்று திடீரென கோலடிக்கும் திறன் கொண்டது. அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி பந்தை கடத்தி, பம்பரம் போன்று சுழன்று கோலடிப்பதில் வல்லவர் என்றாலும், நடப்பு சீசனில் சுயநலம் (அவரிடம் சுயநலம் இல்லை. ஆனாலும் கோலடிக்க முன்னெப்போதும் இல்லாத அளவில் வாய்ப்பு தருகிறார்) இல்லாமல் மற்றொரு உத்தியையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அதுயாதெனில் தான் மட்டுமே நன்றாக கோலடிப்பதை அறிந்து, தன்னிடம் சுழலும் எதிரணி வீரர்களை ஏமாற்றி, அணியின் மற்ற வீரர்கள் கோலடிக்க வாய்ப்பு வழங்குகிறார். இதனால் கடைசி நேரத்தில் கூட அர்ஜெண்டினா கோல் மழை பொழிகிறது. ஆட்டத்திறனில் அர்ஜெண்டினாவின் முன்களம், நடுகளம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. பின்களம் சற்று சோர்வான நிலையில் இருந்தாலும், கோல் கீப்பர் மார்ட்டினெஸ் வலுவான ஆட்டத்துடன் பின்களத்தை கவனித்துக் கொள்கிறார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து கால்பந்து உலகில் வித்தியாசமான ஆட்டத்திற னை கொண்டது. முன்களத்தில் கோலடிக்காமல் 10 நிமிடம் வரை கூட பந்தை சுழற்றும் திறமை கொண்ட அணியாகும். குறிப்பாக பெனால்டி பாக்ஸ் அருகே கோலடிக்காமலும், பந்தை கோல் வளைக்குள் நேரடியாக செலுத்தாமலும் அதிரடியாக பாஸ் செய்வதில் இங்கிலாந்து வீரர்கள் கெட்டிக்காரர்கள். கோலடிக்க சமயம் பார்க்கமாட்டார்கள். ஆனால் கோலடிக்க கடுமையாக போராடுவார்கள். முன்களத்தை விட நடுகளத்தில் இங்கிலாந்து மிகவும் வலுவான கட்டமைப்பை கொண்டது. ஆனால் நடுகளம், முன்களம் என இரண்டிற்கும் கோலடிக்க இங்கிலாந்து சிறப்பு பயிற்சி வழங்குகிறது. இதனால் இங்கிலாந்தின் முன்கள தாக்குதல் மிகவும் கொடூரமாக இருக்கும். எதிரணி வீரர்களை சோர்வடைய வைத்து, கோலடிக்கும் டெக்னீக் அதிகம் பயன்படுத்துவதால் இங்கிலாந்து அணி கால்பந்து உலகில் ஆதிக்கம் செலுத்துகிறது.

கோப்பை வென்றது போல கொண்டாட்டம் நார்வே அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு

உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் நார்வே அணி, இங்கி லாந்து அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வியுடன் வெளியேறியது. அரையிறுதிக்குச் செல்ல வேண்டும் என்ற நார்வே ரசி கர்களின் கனவு தகர்ந்த போதிலும், தங்கள் நாட்டு வீரர்களைக் கொண்டா டுவதில் அவர்கள் சற்றும் குறைய வில்லை. உலகக்கோப்பை தொடரி லிருந்து வெளியேறிய பிறகு, அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய நார்வே கால்பந்து வீரர்களுக்கு, தலைநகர் ஓஸ்லோவில் (நார்வே) திங்கட்கிழமை பல்லாயிரக்கணக் கான ரசிகர்கள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதாவது ஒரு லட்சத்திற்கும் அதிகமான (தோராய மாக) ரசிகர்கள் சாலைகளில் திரண்டு, தோல்வியால் ஏற்பட்ட சோகத்தைத் தேசபக்தி வெற்றிக் கொண்டாட்ட மாக மாற்றினர். கிட்டத்தட்ட கோப்பை வென்றது போல கொண்டாடி தீர்த்தனர்.

இப்படி எல்லாம் பேசக் கூடாது! செனகல் கால்பந்து சம்மேளனத் தலைவருக்கு வலுக்கும் கண்டனம்

செனகல் கால்பந்து தேசிய அணியின் மருத்துவராக இருப்பவர் அப்தேரஹ்மானே பெடியோரே. இவர் உலகக்கோப்பை தொடரின் போது வீரர்களின் காயம், முன்னெச்சரிக்கை தொடர்பான விஷயங்களை கவனித்தார். இந்நிலையில், பெடியோரே விளையாட்டுச் சார்ந்த மருத்துவர் அல்ல, அவர் ஒரு ‘மகப்பேறு மருத்து வர்’ என செனகல் கால்பந்து சம்மேள னத் தலைவர் அப்துல்லாயே பால் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “எங்கள் அணியின் மருத்துவர் முறையான விளையாட்டு மருத்துவப் பின்னணி கொண்டவர் அல்ல. இதனால், தங்களுக்குத் தேவையான மருத்துவ ஆதரவு கிடைக்குமா? என வீரர்கள் கவலைப்பட்டனர். வீரர்களுக்கு நம்பிக்கையூட்ட சம்மேளனம் கூடுதல் மருத்துவ நிபுணர்களை நாட வேண்டி யிருந்தது” என அவர் கூறியுள்ளார். விளையாட்டு மருத்துவ சங்கம் மறுப்பு இந்த குற்றச்சாட்டுகளை “அடிப் படையற்றது மற்றும் அவதூறானது” என செனகல் விளையாட்டு மருத்துவ சங்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. டாக்டர் அப்தேரஹ்மானே பெடி யோரே விளையாட்டு மருத்துவத்தில் நிபுணத்துவ டிப்ளோமா பெற்றவர். அவர் 2017 முதல் செனகல் அணியின் மருத்துவராகப் பணியாற்றி வரு கிறார். மேலும், அவர் மூன்று உல கக்கோப்பைகள் மற்றும் ஐந்து ஆப்பிரிக்க நாடுகளின் கோப்பை தொடர்களில் பணியாற்றிய அனு பவம் கொண்டவர் என விளையாட்டு மருத்துவ சங்கம் விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் மருத்துவர்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்துக் களை கூற கூடாது என கால்பந்து ரசிகர்கள், செஞ்சிலுவை உள்ளிட்ட மருத்துவ அமைப்புகள் செனகல் கால்பந்து சம்மேளனத் தலைவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.