தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாடு

8 Jul 2026, 8:25 pm
விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

திக்... திக்... 14 நிமிடம் அடுத்தடுத்து 3 கோலடித்து பிரமிக்க வைத்த அர்ஜெண்டினா

23ஆவது சீசன் உலகக்கோ ப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நாக் அவுட்- 16 சுற்று ஆட்டங்கள் புதனன்று நிறைவு பெற்றன. பெனால்டியை வீணடித்த மெஸ்ஸி இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் செவ்வாயன்று நள்ளிரவு நடைபெற்ற 6ஆவது நாக் அவுட்- 16 சுற்று ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - எகிப்து அணிகள் மோதின. சாம்பியன் அணி யாக இருந்தால் என்ன? என்ற சொற்றொ டருக்கு ஏற்ப எகிப்து அணி தொடக்கம் முதலே கோலடிக்க ஆதிக்கம் செலுத்தி யது. இதன்பலனாக ஆட்டத்தின் 15ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் யாசீர் கோலடித்தார். இந்த கோலுக்கு பதிலடி கொடுக்க 21ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்த வாய்ப்பை கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மெஸ்ஸி வீணடித்தார். முதல் பாதியில் எகிப்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தோல்வி கணிப்பு பொய்யானது இரண்டாம் பாதியின் 67ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் முஸ்தபா கார்னருக்கு அருகே கோலடித்தார். இது அதிரடி கோலா கும். 75ஆவது நிமிடம் வரை 2-0 என்ற கணக்கில் எகிப்து முன்னிலை பெற்ற தால், இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டி னா அணி தோல்வியை தழுவும் என எதிர்பார்க்கப்பட்டது. இன்னும் 15 நிமி டமே உள்ள சூழலில் எப்படி வெற்றி பெற முடியும், நமக்கு தோல்வி தான் என அர்ஜெண்டினா ரசிகர்களும் மைதானத்திலேயே கண்ணீர் வடிக்க ஆரம்பித்தனர். 77ஆவது நிமிடம் முதல் அர்ஜெண்டினா அணி கோலடிக்க தாக்குதலை தொடுத்தது. மெஸ்ஸி உட்பட அனைவரும் மைதானத்தில் பம்பரமாக சுழன்றனர். இந்த தாக்கு தல் மூலம் 79ஆவது நிமிடத்திலிருந்து அர்ஜெண்டினாவுக்கு வெற்றிநடை துவங்கியது. 79ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் ரோமிரோ தலை யால் முட்டி அசத்தலாக கோலடித் தார். அடுத்த 4 நிமிட இடைவெளியில் (83`) அர்ஜெண்டினா கேப்டன் மெஸ்ஸி அதிரடி ஷாட் மூலம் கோலடித்தார். இது பல்வேறு சிக்கலுக்கு இடையே அடிக்கப்பட்ட கோலாகும். இந்த கோல் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமனில் நின்றது. 90ஆவது நிமிடம் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்க வில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நிமிடம் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் உதிரி நிமிடத்தில் (90+3’ - காயம் நேரம்) இளம் வீரர் என்ஸோ பெர்னாண்டஸ் தந்திரமான கணிப்பு கோலடித்தார். இந்த கோலை எகிப்து மட்டுமின்றி, அர்ஜெண்டினா கூட எதிர்பார்க்கவில்லை. காரணம் காற்றில் அதிவேகத்தில் வந்த பந்தை அற்புதமாக தலையால் முட்டி என்ஸோ கோலடித்தார். தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்டு, வெறும் 14 நிமிட இடைவெளி யில் அடுத்தடுத்து 3 கோல்களை விளாசி சூப்பர் வெற்றியுடன் (3-2 என்ற கோல் கணக்கில்) அர்ஜெண்டி னா அணி எகிப்தை வீழ்த்தி காலி றுதிக்கு முன்னேறியது. ஜூலை 12 அன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

ஒவ்வொரு போட்டியிலும் சாதனை படைக்கும் மெஸ்ஸி

எகிப்து அணிக்கு எதிராக 83ஆவது நிமிடத்தில் கோலடித்ததன் மூலம் மெஸ்ஸி தனது 21ஆவது உலகக்கோப்பை கோலைப் பதிவு செய்தார். மேலும் இந்த உலகக்கோப்பை தொடரின் வரலாற்றில் ‘அதிக கோல்கள் அடித்தவர் (8 கோல்கள்)’ என்ற தனது சாதனையுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். அத்துடன், உல கக்கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 9 போட்டி களில் கோலடித்த முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனை யையும் மெஸ்ஸி படைத்துள்ளார். அதே போல உல கக்கோப்பையின் நாக்-அவுட் சுற்றில் தனது 14ஆவது போட்டியில் விளையாடியதன் மூலம், உலகக்கோப்பை வரலாற்றில் அதிக நாக்-அவுட் போட்டிகளில் விளை யாடிய ஜெர்மனியின் மிரோஸ்லாவ் குளோஸ் சாதனை யை மெஸ்ஸி சமன் செய்துள்ளார்.

என்ஸோ - 3000 கோல்கள்

இளம் வீரர் என்ஸோ பெர்னாண்டஸின் அசத்தலான கோல் மூலம் தான் அர்ஜெண்டினா காலிறுதிக்கு முன்னேறியது. என்ஸோவின் கோல் அர்ஜெண்டினாவிற்கு மட்டுமின்றி, உலகக்கோப்பைக்கும் மிக முக்கியமானது தான். அதாவது என்ஸோவின் கோல் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றின் 3,000ஆவது கோலாகும்.

காலிறுதி ஆட்டங்கள்

பிரான்ஸ்- மொரோக்கோ நேரம் : அதிகாலை 1:30 மணி (ஜூலை 10) இடம் : பாஸ்டன், அமெரிக்கா

ஸ்பெயின் - பெல்ஜியம் நேரம் : அதிகாலை 12:30 மணி (ஜூலை 11) இடம் : லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா

நார்வே - இங்கிலாந்து நேரம் : அதிகாலை 2:30 மணி (ஜூலை 12) இடம் : மியாமி, அமெரிக்கா

அர்ஜெண்டினா சுவிட்சர்லாந்து நேரம் : காலை 6:30 மணி (ஜூலை 12) இடம் : கேன்சாஸ், அமெரிக்கா சேனல் : ஜீ 5 (ZEE 5), யுனைட்8 (தொலைக்காட்சி)

பெனால்டி வரை மல்லுக்கட்டு கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது சுவிட்சர்லாந்து

நடப்பு சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் கடைசி நாக் அவுட் - 16 சுற்று ஆட்டத்தில் கொலம்பியா - சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் கனடாவின் வான்கூவர் நகரில் புதனன்று நடைபெற்றது. ஆட்டத்தின் தொடக்க நிமிடம் முதலே கோலடிக்க கொலம்பியா தீவிர முயற்சி மேற்கொண்டது. முதல் பாதியில் கிட்டத்தட்ட 6க்கும் மேற்பட்ட கோல் வாய்ப்புகளை உருவாக்கியும் அந்த அணி யால் கோலடிக்கவில்லை. அதே போல சுவிட்சர்லாந்து அணி கிடைத்த கோல் வாய்ப்புகளையும் கோட்டை விட்டது. இரண்டாம் பாதியிலும் இதே நிலை நீடித்தது. நிர்ணயிக்கப்பட்ட முழுநேர (90 நிமிடம்) ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்க வில்லை. கூடுதல் நேரமும் (30 நிமிடம்) கோலின்றி நிறைவு பெற்றது. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. பர பரப்புடன் நகர்ந்த இந்த பெனால்டி ஷூட்-அவுட்டில், சுவிட்சர்லாந்து அணி 4-3 என்ற கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. முன்னணி அணிகளில் ஒன்றான கொலம்பியா உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது.

சத்தமில்லாமல் காலிறுதி - இது சுவிட்சர்லாந்து ஸ்டைல்

அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி சாத னை, கேபோ வெர்டே கோல்கீப்பர் வோசின்ஹா கலக்கல், குட்டித் தீவு நாடான குரோசோ மிரட்டல், ரொனால்டோ, நெய்மர் ஓய்வு ;ரசிகர்கள் கண்ணீர் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தான் நடப்பு சீசன் உலகக்கோப்பை தொடரில் டிரெண்டிங் செய்திகளாக இருந்தன. சுவிட்சர்லாந்து நாடு உலகக்கோப்பையில் விளையாடுகிறதா? என்று கூட கேட்கலாம். இது தான் சுவிட்சர்லாந்து அணியின் உலகக் கோப்பை தொடர் நிலைமை. இருந்தா லும் யார் பேசினால் என்ன? பேச வில்லை என்றால் என்ன? என்பது போல சத்தமில்லாமல் காலிறுதிக்கு முன்னேறி யுள்ளது சுவிட்சர்லாந்து.

சத்தமில்லாமல் காலிறுதி - இது சுவிட்சர்லாந்து ஸ்டைல்

அர்ஜெண்டினாவுக்கு ஆதரவாக நடுவர்கள் ஒருத லைப்பட்சமாகச் செயல்பட்டனர் என எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் குற்றம்சாட்டியுள்ளார். போட்டி முடிந்த பின்பு நடை பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறுகையில், “மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சில வெளிப்புறக் காரணிகள் இந்த ஆட்டத்தின் முடி வைத் தீர்மானித்துள்ளன. நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா கோப்பையை தக்க வைக்க வேண்டும் அல்லது மெஸ்ஸி தொட ர்ந்து விளையாட வேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கலாம். அர்ஜெண்டினா அணிக்கு அனைத்து மட்டங்களிலும் ஆதரவு கிடைத்தது. எகிப்து நட்சத்திர வீரர் முகமது சாலா மைதானத்தில் தள்ளிவிடப்பட்டபோது, தங்களுக்குக் கிடைக்க வேண்டிய பெனால்டி வாய்ப்பு முற்றிலும் மறுக்கப்பட்டது. அதுகுறித்து ‘வார் (Video Assistant Referee)’ சோதனைக் கூட செய்யப்பட வில்லை. எகிப்து அடித்த கோல் ஒன்று நடுவரால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்பாக அர்ஜெண்டினாவின் மெக் அலிஸ்டர் எகிப்து வீரரின் சட்டையைப் பிடித்து இழுத்ததை நடுவர்கள் கண்டுகொள்ளவில்லை” என அவர் குற்றம்சாட்டினார்.

மஞ்சள் அட்டை

முன்னதாக, போட்டியின் போது நடுவர் பிரான்சுவா லெடெக்ஸியருக்கும், எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹச னுக்கும் வார்த்தை மோதல் ஏற்பட் டது. இதனால் நடுவர் பயிற்சி யாளருக்கு மஞ்சள் அட்டை காண்பித் தார். அதே சமயம் இனவெறி குற்றச்சாட்டும் இந்த ஆட்டத்தில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.