விளையாடு
4 Jul 2026, 8:06 pm

விளையாடு

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

தப்பிப் பிழைத்த உலக சாம்பியன் கேபோ வெர்டேவின் தவறால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜெண்டினா

23ஆவது சீசன் உலகக் கோப்பை கால்பந்து தொ டர் வட அமெரிக்க நாடுக ளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளில் கூட்டாக நடை பெற்று வருகிறது. இந்த தொடரில் தற்போது நாக் அவுட் - 32 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மெஸ்ஸி சாதனை இந்நிலையில், இந்திய நேரப்படி சனியன்று அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற 15ஆவது நாக் அவுட் - 32 ஆட்டத்தில் நடப்பு உலக சாம்பியன் அர்ஜெண்டினா - கேபோ வெர்டே அணி கள் மோதின. இந்த ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலடித்தார். இந்த கோல் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் 20 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற அசாத்திய உலக சாதனையை மெஸ்ஸி டைத்தார். முதல் பாதியில் அர்ஜெண்டி னா அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. 11 கோல் கீப்பர்கள் இரண்டாம் பாதியின் 59ஆவது நிமி டத்தில் கேபோ வெர்டே வீரர் டெராய் டுவார்டே கோலடித்தார். இந்த கோல், முதல் பாதியில் மெஸ்ஸி அடித்த கோ லின் ஒரே மாதிரி ஆகும். 90ஆவது நிமிடம் வரை அர்ஜெண்டினா அணி கோலடிக்க கடுமையான தாக்குதல் நடத்தியது. ஆனால் கேபோ வெர்டேவின் நட்சத்திர வீரர் வொசின்ஹாவின் (கோல் கீப்பர்) தலைமையில் 11 கீப்பர்களுடன் விளையா டியது போல, அர்ஜெண்டினாவின் தாக்கு தலை கேபோ வெர்டே எளிதாக முறி யடித்தது. முழு ஆட்டநேரம் வரை இரு அணிக ளும் கோலடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்த நிலையில், கூடுதல் நேரம் கடைபிடிக் கப்பட்டது. கூடுதல் நேரம் தொடங்கிய 2 நிமிட இடைவெளியில் அர்ஜெண்டினா வீரர் எல்.மார்டினெஸ் (92’) கோலடித்தார். அடுத்த 9 நிமிட இடைவெளியில் (103’) கேபோ வெர்டேவின் லோபஸ் கேப்ரல் அதி ரடியாக கோலடித்தார். இது பெனால்டி பாக்ஸ் அருகே அடிக்கப்பட்ட பிரம்மாண்ட கோலாகும். சேம் சைடு இந்த கோலை தொடர்ந்து இரு அணி வீரர்களும் கோலடிக்க தாக்குதல் பாணியில் இறங்கினர். இதனால் 104 ஆவது நிமிடத்திற்கு பிறகு, ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல்பறந்தது. போட்டி நடைபெற்ற மியாமி மைதானம் அமைதி பூங்காவானது. ஆட்டத்தின் 111ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா அணிக்கு கார்னர் கிக் கிடைத்தது. மெஸ்ஸி உதைத்த பந்து கேபோ வெர்டேவின் டினே போர்கஸ் மீது பட்டு ‘சேம் சைடு’ மாறியது. இந்த அதிர்ஷ்ட கோல் மூலம் நூலிழையில் தப்பிப் பிழைத்த நடப்பு சாம்பியன் அர்ஜெண்டி னா அணி கூடுதல் நேர முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, நாக் அவுட் - 16 சுற்றுக்கு முன்னேறியது. ஜூலை 7ஆம் தேதி நடைபெறும் நாக் அவுட் - 16 சுற்று ஆட்டத்தில் அர்ஜெண்டி னா - எகிப்து அணியை எதிர்கொள்கிறது.

இதயங்களை வென்ற கேபோ வெர்டே

மேற்கு ஆப்பிரிக்கக் கடற் கரையில் வெறும் 10 தீவுகளையும், 5,25,000 மக்கள் தொகையையும் கொண்ட சிறிய நாடான கேபோ வெர்டே, உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற மிகச்சிறிய நாடு என்ற உலக சாதனையுடன் அர்ஜெண்டினா அணியை எதிர்கொண்டது. லீக் ஆட் டத்தில் பலமான அணிகளை கலங்க வைத்தது போல, மூன்று முறை உல கச்சாம்பியனான அர்ஜெண்டினா வையும் நாக் அவுட் ஆட்டத்தில் நடுங்க வைத்துள்ளது. குறிப்பாக மெஸ்ஸியின் இரண்டா வது வீடாக (மியாமி கிளப் அணிக்காக விளையாடி வருவதால்) கருதப்படும் மியாமி மைதானத்தில் 90% அர்ஜெண் டினா ரசிகர்கள் மத்தியில் கேபோ வெர்டே கோலடிக்க தாக்குதல், தடுப்பாட் டம், கோல் கீப்பரின் (வோசின்ஹா) அசத்தலான தடுத்தல் உள்ளிட்ட அதிரடி சம்பவங்களுடன் இதுதான் அர்ஜெண்டினாவின் கோட்டையா? என அசைத்துப் பார்த்துச் சென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணி வெற்றி பெற்றாலும், உலக கால் பந்து ரசிகர்களின் மனதை வென்றது போ வெர்டே தான். உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் கேபோ வெர்டே வுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘நாக் அவுட் - 16’ சுற்றில் கொலம்பியா, எகிப்து அணிகள்

நாக் அவுட் - 32 சுற்றின் 14ஆவது ஆட்டத்தில் எகிப்து - ஆஸ்திரே லிய அணிகள் மோதின. அமெரிக்கா வின் டல்லாஸ் நகரில் சனியன்று நடை பெற்றது. ஆட்டத்தின் 13ஆவது நிமி டத்தில் எகிப்து வீரர் இமாம் கோல டித்தார். முதல் பாதியில் எகிப்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இரண்டாம் பாதியின் 55ஆவது நிமிடத்தில் எகிப்து வீரர் முகமது ஹனி செய்த தவறால், ஆஸ்திரேலிய அணிக்கு ‘சேம் சைடு’ கோல் கிடைத்தது. ஆட்டத்தின் 90 ஆவது நிமிடம் வரை இரு அணிக ளும் (1-1) மேற்கொண்டு கோலடிக்க வில்லை. இதனால் கூடுதல் நேரம் கடை பிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் இதே நிலைமை தான். இறுதியாக பெனால்டி ஷூட் அவுட் முறை கொண்டுவரப்பட்டது. பெனால்டி ஷூட் அவுட் முடிவில் ஆஸ்திரேலியாவை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் - 16 சுற்றுக்கு முன்னேறி யது எகிப்து. கொலம்பியா கடைசி நாக் அவுட் - 32 சுற்று ஆட்டத்தில் கொலம்பியா - கானா அணிகள் மோதின. அமெரிக்காவின் கேன்சாஸ் மைதானத்தில் சனியன்று இந்த போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 14ஆவது நிமிடத்தி லேயே கொலம்பியா அணி முதல் கோலடித்தது. போட்டியின் 8ஆவது நிமிடத்தில் ஜான் கோர்டோபா காயமடைந்து வெளியேற, அவருக்குப் பதிலாக மாற்று வீரராகக் களமிறங்கிய அனு பவ வீரர் லூயிஸ் சுவரேஸ் பந்தை மிக அற்புதமாக பாஸ் செய்ய, அதனை ஜான் அரியாஸ் லாவகமாக கோலாக மாற்றினார். உலகக்கோப்பை நாக்-அவுட் வரலாற்றில் மாற்று வீரராகக் களமிறங்கி மிக விரைவாக (6 நிமி டங்களில்) கோல் அடிக்க உதவிய வீரர் என்ற பெருமையை லூயிஸ் சுவரேஸ் பெற்றார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில் கொலம்பியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் கானாவை வீழ்த்தி, நாக் அவுட் - 16 சுற்றுக்கு முன் னேறியது. ஜூலை 8 அன்று நடை பெறும் நாக் அவுட் -16 ஆட்டத்தில் சுவிட் சர்லாந்து அணியை கொலம்பியா எதிர்கொள்ளவுள்ளது.

பாலஸ்தீனக் கொடியுடன் கொண்டாடிய எகிப்து பயிற்சியாளர்

உலகக்கோப்பை நாக்-அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாலஸ்தீன மக்களுக்கு எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹொசாம் ஹாசன் அர்ப்பணித்துள்ளார். போட்டி முடிந்ததும் எகிப்து அணியின் பயிற்சியாளர் ஹொசாம் ஹாசன், எகிப்து மற்றும் பாலஸ்தீன நாட்டின் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியபடி மைதானத்திற்குள் வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், ஒட்டுமொத்த எகிப்து அணியினரும் மைதானத்தில் ஒன்றாகக் கூடி இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ‘சஜ்தா’ (நெற்றியைத் தரையில் தொட்டு வணங்குதல்) செய்தனர்.

நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் - ஞாயிறு, திங்கள்

பிரேசில் - நார்வே (நாக் அவுட் 16) நேரம் : நள்ளிரவு 1.30 மணி இடம் : நியூ ஜெர்சி, அமெரிக்கா

மெக்சிகோ - இங்கிலாந்து (நாக் அவுட் 16) நேரம் : அதிகாலை 5.30 மணி இடம் : மெக்சிகோ சிட்டி

லெக் ஷாட்ஸ்

உலகக்கோப்பையில் அதிக கோல்களுக்கு ‘அசிஸ்ட் (கோலடிக்க உதவி)’ செய்து மரடோனாவின் (8) சாதனையை முறியடித்தார் லயோனல் மெஸ்ஸி (9). அர்ஜெண்டினாவுக்கு எதிரான போட்டியில் 8 கோல்களைத் தடுத்து மிரள வைத்த கேபோ வெர்டே கோல் கீப்பர் வொசின்ஹா, ஒரே உலகக்கோப்பை தொடரின் உலக பிரசித்திப் பெற்ற கோல் கீப்பராக உருவெடுத்துள்ளார். சொந்த அணிக்கு எதிராக அதிக ‘சேம் சைடு’ கோல்கள் அடிக்கப்பட்ட கால்பந்து உலகக்கோப்பை தொடர் என்ற சாதனையை பெற்றுள்ளது 23ஆவது சீசன் உலகக்கோப்பை. இந்த தொடரில் மொத்தம் 13 ‘சேம் சைடு’ கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. (இதற்கு முன் 2018இல் 12, 1998இல் 6 கோல்கள்)

மகளிர் டி-20 உலகக்கோப்பை

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடம் : லண்டன், இங்கிலாந்து நேரம் : இரவு 8:00 மணி சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ்