தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி கண்ணீரில் கேரளம்

20 Jul 2026, 9:37 pm
அர்ஜெண்டினா  அதிர்ச்சி தோல்வி கண்ணீரில் கேரளம்
<p><strong>அர்ஜெண்டினா அதிர்ச்சி தோல்வி கண்ணீரில் கேரளம்</strong> </p><p>இந்தியா கிரிக்கெட்டிற்கு பெயர் பெற்ற நாடாக இருந்தாலும், கேர ளம் கால்பந்திற்கு புகழ்பெற்றதா கும். அங்கு அர்ஜெண்டினா - பிரேசில் ரசிகர்கள் எலியும், பூனையுமாக இருப் பார்கள். அதே போல பிளக்ஸ் யுத்தம் நடக்கும்; உள்ளூர் போட்டிகளின் போது அர்ஜெண்டினா - பிரேசில் பெயர்க ளால் சண்டை சச்சரவும் அரங்கேறும்; அர சியல் தலைவர்கள் கூட அர்ஜெண்டினா - பிரேசில் என குழுவாக வார்த்தை மோத லில் ஈடுபடுவது வழக்கம். அதனால்தான் இந்திய அளவில் மட்டுமின்றி, கேரளம் சர்வதேச அளவிலும் கூட கால்பந்துக்கு பெயர் பெற்றதாக உள்ளது. நடப்பு சீசன் உலகக்கோப்பையில் கேரளம் மோதல் கொண்டாட்டங்களுடன் தான் வைரலானது. நடப்பு சீசனில் பிரேசில் விரைவி லேயே வெளியேறியதால், அந்த அணி ரசிகர்கள் உலகக்கோப்பையை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். ஆனால், அர்ஜெண்டினா ரசிகர்கள் உலகக் கோப்பையே கதி என்று இருந்தனர். லீக், நாக்-அவுட், காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களில் நன்றாக விளையா டியதால், 2ஆவது முறையாக அர்ஜெ ண்டினா கண்டிப்பாக உலகக்கோப்பை வெல்லும் என எதிர்பார்த்து, கேரள கால்பந்து ரசிகர்கள் வீட்டின் தொ லைக்காட்சி மற்றும் மால், திரை யரங்குகளில் ஞாயிறன்று நள்ளிரவு முதலே குவிய ஆரம்பித்தனர். ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பை யொட்டி மேகாலயா, மணிப்பூர் அரசு களை போல கேரளமும் திங்கள்கிழமை விடுமுறை அறிவித்தது. ஆனால் எதிர்ப்பாராவிதமாக ஸ்பெயின் அணி, நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவை புரட்டியெடுத்து, சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தோல்வியை தாங்க முடியாமல் கேரள ரசிகர்கள் வீடு, பொது இடங்களில் கண்ணீர் வடித்த காட்சி காண்போரை உலுக்கியுள்ளது. </p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.