தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா

13 Jul 2026, 1:45 am
6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா
<p><strong>6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா </strong></p><p>23ஆவது சீசன் உலகக்கோப்பை கால்பந்து தொடர் தற்போது இந்த தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று காலை அமெரிக்காவின் கேன்சாஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - சுவிட்சர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்க நிமிடம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணி, 10ஆவது நிமிடத்தில் கோலடித்தது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக் ஷாட்டை அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் தலையால் முட்டி அசத்தலாக கோலடித்தார். இந்த கோல் மூலம் முதல் பாதியில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றது. சுவிட்சர்லாந்து கீப்பர் கலக்கல் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்க, இரண்டாம் பாதியின் தொடக்கம் முதலே சுவிட்சர்லாந்து அணி கோலடிக்க தாக்குதலில் இறங்கியது. மறுபக்கம் அர்ஜெண்டினாவும் தாக்குதல் நடத்த ஆட்டம் விறுவிறுப்பானது. ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் டான் டோயே கோலடித்தார். இந்த கோலுக்குப் பின்னர், அர்ஜெண்டினா முன்களத்தில் மாற்றம் செய்து, கோலடிக்க அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. 70ஆவது நிமிடம் முதல் 90ஆவது நிமிடம் (உதிரி நிமிடம் சேர்த்து) வரை அர்ஜெண்டினாவின் 7 கோல் வாய்ப்புகள் வீணானது. இதில் 3 முக்கிய ஷாட்களும் அடங்கும். இதனை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் கோபெல் அபாரமாக தடுத்தார். ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. கூடுதல் நேரத்திலும் அர்ஜெண்டி னா அணியின் காலடியில்தான் பந்து அதிக நேரம் சுழன்றது. பல்வேறு போராட்டத்துக்குப் பின், 112ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் ஜூலியன் ஆல்வரேஸ் பெனால்டி பாக்ஸுக்குள் நுழையாமல் அதிரடி ஷாட் மூலம் பிரம்மாண்ட கோலடித் தார். 120ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல டிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டி னா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப் பட்டது. கடைசி நேர கோல் ஆனால் கூடுதல் நேரத்தின் உதிரி நிமிடத்தில் (120+1’) லூட்டாரோ மார்டினெஸ் கோலடித்து அர்ஜெண்டினாவின் வெற்றியை 3-1 என்ற கோல் கணக்கில் உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா அணி தனது உலகக்கோப்பை வரலாற்றில் 6ஆவது முறையாக (1930, 1986, 1990, 2014, 2022, 2026) உலகக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.