விளையாடு
12 Jul 2026, 10:08 pm

உலகக்கோப்பை கால்பந்து திருவிழா

6ஆவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜெண்டினா

23ஆவது சீசன் உலகக்கோ ப்பை கால்பந்து தொடர் வட அமெரிக்க நாடுகளான அமெரிக்கா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடு களில் கூட்டாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடர் இறு திக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கடைசி காலிறுதி ஆட்டம் இந்திய நேரப்படி ஞாயிறன்று காலை அமெரிக்காவின் கேன்சாஸ் நகரில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினா - சுவிட்சர்லா ந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் தொடக்க நிமிடம் முதலே ஆதிக்கம் செலுத்திய அர்ஜெண்டினா அணி, 10ஆவது நிமிடத்தில் கோல டித்தது. கால்பந்து உலகின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி அடித்த கார்னர் கிக் ஷாட்டை அலெக்சிஸ் மெக் அலிஸ்டர் தலையால் முட்டி அசத்தலாக கோல டித்தார். இந்த கோல் மூலம் முதல் பாதி யில் அர்ஜெண்டினா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. சுவிட்சர்லாந்து கீப்பர் கலக்கல் அர்ஜெண்டினா அணிக்கு பதிலடி கொடுக்க, இரண்டாம் பாதியின் தொடக்கம் முதலே சுவிட்சர்லாந்து அணி கோலடிக்க தாக்குதலில் இறங்கி யது. மறுபக்கம் அர்ஜெண்டினாவும் தாக்குதல் நடத்த ஆட்டம் விறுவிறுப்பா னது. ஆட்டத்தின் 67ஆவது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து வீரர் டான் டோயே கோலடித்தார். இந்த கோலுக்குப் பின்னர், அர்ஜெண்டினா முன்க ளத்தில் மாற்றம் செய்து, கோலடிக்க அதிரடி ஆட்டத்தில் இறங்கியது. 70ஆவது நிமிடம் முதல் 90ஆவது நிமிடம் (உதிரி நிமிடம் சேர்த்து) வரை அர்ஜெண்டினாவின் 7 கோல் வாய்ப்புகள் வீணானது. இதில் 3 முக்கிய ஷாட்களும் அடங்கும். இதனை சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் கோபெல் அபாரமாக தடுத்தார். ஆட்டநேர முடி வில் இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்கவில்லை. இதனால் கூடுதல் நேரம் கடைபிடிக்கப்பட்டது. ஜூலியன் ஆல்வரேஸ் மிரட்டல் கூடுதல் நேரத்திலும் அர்ஜெண்டி னா அணியின் காலடியில்தான் பந்து அதிக நேரம் சுழன்றது. பல்வேறு போராட்டத்துக்குப் பின், 112ஆவது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் ஜூலியன் ஆல்வரேஸ் பெனால்டி பாக்ஸுக்குள் நுழையாமல் அதிரடி ஷாட் மூலம் பிரம்மாண்ட கோலடித் தார். 120ஆவது நிமிடம் வரை இரு அணிகளும் மேற்கொண்டு கோல டிக்கவில்லை. இதனால் அர்ஜெண்டி னா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெரும் என எதிர்பார்க்கப் பட்டது. கடைசி நேர கோல் ஆனால் கூடுதல் நேரத்தின் உதிரி நிமிடத்தில் (120+1’) லூட்டாரோ மார்டி னெஸ் கோலடித்து அர்ஜெண்டினா வின் வெற்றியை 3-1 என்ற கோல் கணக்கில் உறுதி செய்தார். இந்த வெற்றியின் மூலம் அர்ஜெண்டினா அணி தனது உலகக்கோப்பை வர லாற்றில் 6ஆவது முறையாக (1930, 1986, 1990, 2014, 2022, 2026) உல கக்கோப்பை அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. ஜூலை 15ஆம் தேதி நள்ளிரவில் நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை அர்ஜெண்டினா எதிர்கொள்கிறது.

புதிய சாதனை படைத்த மெஸ்ஸி

சுவிட்சர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் அர்ஜெண்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி கோலடித்து கோல்டன் பூட் (தங்க காலணி) ரேஸில் வலுவான முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கோலடிக்கவில்லை. எனினும் உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில், இதுவரை யாரும் எட்டாத புதிய மைல்கல்லை மெஸ்ஸி எட்டியுள்ளார். அதாவது உலகக்கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுகளில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை மெஸ்ஸி (15 முறை) பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக ஜெர்மனி வீரர் குளோஸ் 14 நாக்-அவுட் போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் இருந்தார். தற்போது மெஸ்ஸி அவரைப் பின்னுக்குத் தள்ளி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நார்வே அணியை எளிதாக வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

உலகக்கோப்பை தொடரின் 3ஆவது காலிறுதி ஆட்டத் தில் இங்கிலாந்து - நார்வே அணி கள் மோதின. அமெரிக்காவின் மியாமி நகரில் இந்திய நேரப்படி ஞாயி றன்று அதிகாலை இந்த ஆட்டம் நடை பெற்றது. கடுமையான வெயிலுக்கு இடையே நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 36ஆவது நிமிடத்தில் நார்வே வீரர் ஆண்ட்ரஸ் கோல டித்தார். இது பெனால்டி பாக்ஸ் அருகே அடிக்கப்பட்ட சூப்பர் ஷாட் கோலாகும். இதற்கு பதிலடியாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜூட் பெல்லி ங்காம், முதல் பாதியின் உதிரி நேரத்தில் (45+2’) கோலடித்து ஆட்டத்தை 1-1 என சமன் செய்தார். இது சாதாரண கோல் அல்ல. 5 நார்வே வீரர்களின் கடுமை யான தடுப்புக்கு இடையே அடிக்கப் பட்ட வெகுசிறப்பான கோலாகும். நார்வே வீரர்கள் கொதிப்பு இரண்டாம் பாதியின் 55ஆவது நிமி டத்தில் நார்வே அணி கார்னர் கிக் பகுதியில் இருந்து கோலடித்தது. ஆனால் இந்த கோல் ‘வார்’ தொழில் நுட்பம் மூலம் ரத்து செய்யப்பட்டது. நடுவரின் இந்த அறிவிப்புக்கு நார்வே வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஆட்டநேர முடிவில் (90’) இரு அணிகளும் மேற்கொண்டு கோலடிக்க வில்லை. இதனால் ஆட்டம் கூடுதல் நேரத்திற்குச் சென்றது. கூடுதல் நேரத்தின் மூன்றாவது நிமிடத்தி லேயே (93’) பெல்லிங்காம் மீண்டும் கோலடித்தார். இதுவே ஆட்டத்தின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதி யில் இங்கிலாந்து 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பந்து கேபிளில் உரசியதா?

நார்வே அணிக்கெதிராக ஆட்டத்தின் முதல் பாதி யின் உதிரி நிமிடத்தில் (45+2’) இங்கி லாந்து வீரர் ஜூட் பெல்லிங்காம் கோல் அடித்தார். இவர் கோலடிக்கும் முன்பு, பந்து மைதானத்தின் மேலே இருந்த டிவி கேபிளில் பட்டு திசைமாறி நேராக பெல்லிங்காமிடம் விழுந்ததாகவும், இதனால் தான் அவர் கோலடித்ததாக நார்வே தரப்பில் (போட்டியின் போதே) குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் பந்திற்குள் பொருத்தப் பட்டுள்ள சென்சார் (Heartbeat of the ball sensor), பந்து கேபிளில் உரசியதற்கான எந்தவித அதிர்வை யும் பதிவு செய்யவில்லை என்று சர்வ தேச கால்பந்து சம்மேளனம் தெரி வித்து, கேபிளில் பந்து படவில்லை என்பது அதிகாரப்பூர்வ முடிவை என அறிவித்தது. இதனால் போட்டிக்கு இடையே இந்த சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பந்து உரசினால்? ஒருவேளை பந்து கேபிளில் உரசி யது உறுதி செய்யப்பட்டால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, நடு களத்தில் இருந்து மீண்டும் போட்டி தொடங்கும். அடிக்கப்பட்ட கோல் ரத்து செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்து வீரருக்கு ரெட் கார்டு ; நடந்தது இதுதான் அர்ஜெண்டினா மீதோ, நடுவர்கள் மீதோ தவறு இல்லை!

அர்ஜெண்டினா அணிக்கெதி ரான ஆட்டத்தில் சுவிட்சர் லாந்து முன்கள வீரர் எம்போலோ வுக்கு நடுவர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். எகிப்து அணிக் கெதிராக சதி செய்தது போல, சுவிட்சர் லாந்து அணிக்கும் எதிராக நடுவர்கள் சதி செய்து அர்ஜெண்டினா அணியின் வெற்றிக்கு உழைத்துள்ளனர் என ரசி கர்கள் எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை வெளியிட்டனர். ஆனால் உண்மை யில் எம்போலோ மீது தான் தவறு. 72ஆவது நிமிடத்தில் பந்தைக் கடத்த முயன்றபோது அர்ஜெண்டினா வீரர் பரேடெஸ் தள்ளிவிட்டது போன்று எம்போலோ கீழே விழுந்தார். எம்போலோவுக்கு அருகிலேயே இருந்ததால் பரேடெஸுக்கு நடு வர் மஞ்சள் அட்டை காட்டினார். அர்ஜெ ண்டினா அணி மேல்முறையீடு செய்ய நடுவர் ‘வார்’ ஆய்வுக்குச் சென்றார். மறுஆய்வுக்குப் பிறகு, அந்தத் தீர்ப்பு மாற்றப்பட்டது. அதாவது பரேடெஸ் தள்ளிவிடவில்லை; எம்போலோ தான் வேண்டுமென்றே நடித்து கீழே விழுந்துள்ளார் என்பது அம்பலாகியுள்ளது. இதனால் எம்போலோவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இரண்டு மஞ்சள் அட்டை பெற்றதால் (மற்ற ஆட்டங் களையும் சேர்த்து) நடுவர் ரெட் கார்டு கொடுத்து எம்போலோவை வெளியேற்றினார். இதுதான் நடந்தது. எம்போலோ பெற்ற ரெட் கார்டுக்கு அவரே தான் காரணம். அர்ஜெண்டினாவோ, நடுவரோ (ஜோவோ - போர்ச்சுக்கல்) அல்ல என்பதே உண்மை.