சென்னை விரைவு செய்திகள்
18 Dec 2025, 5:31 pm
<p><strong>திருவண்ணாமலையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்</strong></p>
<p>திருவண்ணாமலை, டிச. 18- திருவண்ணாமலை துணை மின் நிலையத்தில் வரும் சனிக்கிழமை (டிச. 20) அன்று அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என மின்சார வாரியச் செயற்பொறியாளர் (மேற்கு) வ. சரவணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார். அதன்படி, திருவண்ணாமலை நகரம், ஊசாம்பாடி, வடஆண்டாப்பட்டு, கீழ்நாச்சிப்பட்டு, மலப்பாம்பாடி, வள்ளிவாகை, சானானந்தல், களஸ்தம்பாடி, குன்னுமுறிஞ்சி, வேங்கிக்கால், துர்க்கைநம்மியந்தல், வடஅரசம்பட்டு, நொச்சிமலை, தென்அரசம்பட்டு, கிளியாப்பட்டு, குன்னியந்தல், சடையனோடை, சேரியந்தல் ஆகிய பகுதிகளிலும், இதேபோல் தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களைச் சார்ந்த பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிப்புணர்வு விளம்பரம் சென்னை, டிச.18- “மிகவும் சத்தமான உணவு மேசைகளே மிகவும் மகிழ்ச்சியானவை என்ற கருப்பொருளில் விவோ நிறு வனம் வெளியிட்டுள்ள புதிய விழிப்புணர்வு விளம்பரம் பொதுமக்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. தற்காலத்தில் செல்பேசிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நமது பொன்னான நேரத்தை, குடும்பத்தினருடன் பயனுள்ள வகையில் செலவிடுவதை வலியுறுத்தி இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே இரவு உணவு மேசையின் இரண்டு வெவ்வேறு வடிவங்களை இது ஒப்பிட்டுக் காட்டுகிறது: ஒன்று, அனைவரும் அமைதியாகக் கைபேசியில் மூழ்கிக் கிடக்கும் மேசை; மற்றொன்று, அவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு குடும்பத்தினருடன் கலகலப்பாக உரையாடும் மேசை. இந்த விளம்பரம் தட்டுகளின் ஓசை, இயல்பான நகைச்சுவை மற்றும் ஒன்றோடொன்று கலக்கும் அன்பான குரல்களின் வழியே உரையாடல்களின் முக்கியத்துவத்தை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. விழுப்புரத்தில் 1.100 கிலோ கஞ்சா பதுக்கிய 5 பேர் கைது விழுப்புரம், டிச. 18- விழுப்புரத்தில் விற்பனைக்காகக் கஞ்சா பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கல்பனா, உதவி ஆய்வாளர் சண்முகம் ஆகியோர் ஜி.ஆர்.பி தெரு பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த மைக்கேல் (எ) மருதமலையைச் சோதனை செய்ததில் அவரிடம் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து, மணிகண்டன் (எ) ராம்போ (37), சிங்காரவேலன் (35), உத்திரமூர்த்தி (32), இளம்வழுதி (28) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்கள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். பள்ளி மாணவர்களை மிரட்டி மது குடிக்க வைத்த கொடூரம் குழந்தைகள் நல அதிகாரி விசாரணை சிதம்பரம், டிச. 18- சிதம்பரம் அண்ணாமலைநகர் அம்மன் கோவில் கிராமத்தில், பள்ளி மாணவர்களை மிரட்டி கட்டாயமாக மது குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த சமூக விரோதி சுகுந்தன் (27) என்பவர், மாணவர்களின் கை கால்களைக் கட்டிப்போட்டு மதுவை வாயில் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நலப் பாதுகாப்பு அதிகாரி செந்தில் நேரில் விசாரணை நடத்தினார். விசாரணையில், சுகுந்தன் மாணவர்களை அடித்து, மிரட்டி இச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட சுகுந்தன் மீது ஏற்கனவே மின்மாற்றியில் காப்பர் திருட்டு மற்றும் இரும்புப் பொருட்கள் திருட்டு போன்ற பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
