நட்டாற்றில் விட்டவர்களா உற்ற தோழர்கள்?
14 Mar 2026, 2:57 pm

நட்டாற்றில் விட்டவர்களா உற்ற தோழர்கள்?

தேர்தல் வந்தால் தமிழ்நாட்டு மக்கள் மீது பாஜகவுக்கு பாசம் பொங்கி வழியும். அதனால் ஒன்றிய அரசு சின்னச் சின்ன விளம்பரங்கள் தந்தது மாறி முழுப்பக்க விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடுகிறது. ஆனால் அதில் உண்மை களுக்குத் தான் பஞ்சமாக இருக்கிறது. “

தமிழ்நாட்டு விவசாயிகளின் உற்ற தோழனாய் உறுதுணைபுரியும் மத்திய அரசு” என்று கூறும் (10.3.2026) விளம்பரத்தின் முதல் அம்சமாக, “பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதி (PMKISAN) திட்டத்தின் கீழ் ரூ.12,700 கோடிக்கும் அதிகமாக வழங் கப்பட்ட நிதியுதவி 47 லட்சம் விவசாயிக ளுக்கு பல்வேறு வழிகளில் பேருதவியாக அமைந்து வருகிறது” என்று கூறுகிறது. உண்மையில் பிஎம்கிசான் திட்டத்தின் உதவி நிதி பெறும் தமிழ்நாட்டு விவசாயிக ளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை ஒன்றிய அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) கூறுவதை பாருங்கள். உண்மை இப்படி அந்த விளம்பரத்துக்கு எதிராக உள்ளது. மேற்கண்ட பட்டியலில் எந்த ஆண்டி லும் 47 லட்சம் விவசாயிகள் பயனாளிகள் என இல்லவே இல்லை.

அத்துடன் இந்த பட்டியலின் படி 2020-21 ஆம் ஆண்டு 44.58 லட்சம் என்பது தான் உச்சபட்சம். அப்படி யிருக்க இந்த 47 லட்சம் எந்த ஆண்டு? எப்படி வந்தது? ஒருவேளை இனி கொடுக்கப்போவது 47 லட்சமாக இருந்தால் அதுவும் கூட 2026 ஏப்ரல் மாதத்தில் தான் இருக்க முடியும். அதாவது தேர்தலுக்காக அதிகரிப்பதாக இருந்தால் மட்டுமே! விவசாயிகளின் விளைபொருள்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தருவோம் என 2014-இல் வாக்குறுதி கொடுத்து தான் பாஜக ஆட்சிக்கு வந்தது.

ஆனால் பிரதமரானதும் மோடி வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார். தமிழ்நாட்டு விவசாயிகளை மட்டு மல்ல இந்தியா முழுவதும் உள்ள விவசாயி களை நட்டாற்றில் தவிக்கவிட்டார். தலைநகர் தில்லியைச் சுற்றிலும் விவசா யிகளை சாலைகளில் வெயிலிலும் மழை யிலும் பனியிலும் மட்டுமின்றி கண்ணீரிலும் மிதக்கவிட்டார்.இந்த அரசு தானா உற்ற தோழன்? நெல் கொள்முதலில் தமிழ்நாட்டு விவசா யிகளுக்கு 17 சதவீத ஈரப்பதத்தை 22 சதவீத மாக உயர்த்திக் கேட்டதை ஒப்புக் கொள்ளா மல் விவசாயிகள் நட்டத்தில் வெந்து நொந்து போக விட்ட இந்த அரசு தானா உறுதுணை புரியும் அரசு? ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் கூறி உண்மையாக்க முயல்வது தான் பாசிச குணம். அதுவே பாஜக குணம்! - ப.முருகன்