முந்தய பக்கம்

அரசுக்கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் துவக்கம்

11 Feb 2026, 5:52 pm
அரசுக்கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் துவக்கம்
<p><strong>அரசுக்கல்லூரியில் தொல்லியல் மரபு மன்றம் துவக்கம்</strong></p> <p>தருமபுரி, பிப்.11- தருமபுரி அரசுக்கல்லூரியில் நடை பெற்ற தொல்லியல் மரபு மன்றம் துவக்க விழாவில், பலர் கலந்து கொண்டனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறையில், தொல்லியல் மரபு மன்றம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கோ.கண்ணன் தலைமை &nbsp;வகித்தார். தாவரவியல் துறைத்தலை வர் விஜயா தாமோதரன் வாழ்த்திப் பேசி னார். தருமபுரி தொல்லியல் துறை அலு வலர் வெங்கட குருபிரசன்னா கலந்து கொண்டு, தொல்லியல் அகழ்வாய்வு நடக்கும் இடங்களையும், அதன் தேவைகளையும் குறித்து விரிவாகப் பேசினார். வரலாற்று துறைத்தலைவர் ப.வே.சாரதி, பேராசிரியர் அ.இராஜன் ஆகியோர், தொல்லியல் குறித்த வர லாற்றுப் பூர்வமான ஆய்வுகளையும், தருமபுரி தொல்லியல் ஆய்வுக்களங் கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்த னர். இதைத்தொடர்ந்து, தொல்லியல் சார்ந்த கட்டுரை, பேச்சு, குறும்படம் போட்டிகள் மாணவர்களுக்கு நடத்தப் பட்டன. இதில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங் கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தமிழ் துறைத் தலைவர் அ.கௌரன், உதவி பேராசிரி யர்கள் சி.கணேசன், ப.சி.சரவணன், கு. சிவப்பிரகாசம் மற்றும் கௌரவ விரிவு ரையாளர்கள் உட்பட 100க்கும் மேற் பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram