அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பி.ஆர். இளங்கோ தீவிர வாக்குச் சேகரிப்பு
5 Apr 2026, 5:18 pm
<p><strong>அரவக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பி.ஆர். இளங்கோ தீவிர வாக்குச் சேகரிப்பு</strong></p>
<p>கரூர், ஏப். 5- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற வேட்பாளராக பி.ஆர்.இளங்கோ இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். சின்னதாராபுரம், நேரு நகர், அண்ணா நகர், இந்திரா நகர், அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து, திமுக ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்துக் கூறி, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்று கூறி, தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், திமுக க. பரமத்தி தெற்கு ஒன்றியச் செயலாளர் கே. கருணாநிதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே. கந்தசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
