முந்தய பக்கம்

அரசு ரப்பர் கழக தொழிற்கூட தினக்கூலி ரூ.60 உயர்வு

31 Oct 2026, 10:07 pm
அரசு ரப்பர் கழக தொழிற்கூட தினக்கூலி ரூ.60 உயர்வு
<p><strong>அரசு ரப்பர் கழக தொழிற்கூட தினக்கூலி ரூ.60 உயர்வு</strong></p><p>நாகர்கோவில், அக்.31-அரசு ரப்பர் கழக பால்வடிப்பு, களப்பணி மற்றும் தொழிற்கூட தினக்கூலி தொழிலாளர்களுக்கு 01.12.2025 முதல் ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இறுதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை அரசு ரப்பர் கழகம், பதிவு அலுவலகம், வடசேரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப், சட்டமன்ற உறுப்பினர்கள் ந.தளவாய் சுந்தரம் (கன்னியாகுமரி), ஆர்.செல்லசுவாமி (பத்மநாபபுரம்), றி.றி.பிரவீன்(விளவங்கோடு) ஆகியோர் முன்னிலையில் அரசு ரப்பர் கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ந.சதீஷ் தலைமையில் நடைபெற்றது.இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிற்கூட பணி தொடர்பான ஊதிய உயர்வு வழங்கநிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஒப்புக்கொண்ட நிலையில், தற்போதுவழங்கப்படும் அடிப்படை ஊதியத்தில் ரூ.60 உயர்வு மற்றும் அகவிலைப்படி புள்ளிக்கு ரூ. 25 பைசா உயர்வு வழங்க சுமூக உடன்பாடு எட்டப்பட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனினும் பால்வடிப்பு மற்றும் களப்பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு உடன்பாடு ஏற்படவில்லை.</p><p>இதுகுறித்து சிஐடியு தோட்டம் தொழிலாளர் சங்க தலைவர் நடராஜன் கூறுகையில்,”அக்.30 வெள்ளியன்று நடந்த பேச்சுவார்த்தையில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தலைவர்கள் பங்கேற்றார்கள். தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு இந்த பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு காணப்படவில்லை. தொழிலாளர்களின் ஒப்புதல் பெறாமல் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாது என்பதை தெரிவித்துவிட்டோம் என்றார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram