அரசம்பட்டு கிராமத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றுக!
26 Jun 2026, 12:35 am

அரசம்பட்டு கிராமத்தில் சாலையில் தேங்கும் கழிவுநீரை அகற்றுக!

சங்கராபுரம், ஜூன் 25: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமம், 10-வது வார்டு நடுத்தெருவில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால், கழிவுநீர் சாலையிலேயே தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இப்பகுதி யில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலை யில், கழிவுநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கு வதால் துர்நாற்றம் வீசுவதுடன் கொசுக்கள் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதியில் டெங்கு, மலேரியா போன்ற நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, உடனடியாகத் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றுவ துடன், நிரந்தரத் தீர்வாகக் கழிவுநீர் கால்வாய் வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தார்மீகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.