அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் செலக்சன் பள்ளி சாதனை
22 May 2026, 9:54 pm
<p><strong>அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் செலக்சன் பள்ளி சாதனை</strong></p><p>அறந்தாங்கி, மே 22- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.என்.புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. மாணவி எம். அருணாதேவி 495 மதிப்பெண்களும், எஸ். தாய்மயில் 489 மதிப்பெண்களும், எஸ். அப்துல்லா 488 மதிப்பெண்களும், எஸ். கவினேஷ் 487 மதிப்பெண்களும், கெளதம் மணிகண்டன் 486 மதிப்பெண்களும், எம். சபரிநாதன் 486 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத்தனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சி.கண்ணைய்யா, பள்ளி முதல்வர் க. சுரேஷ்குமார் மற்றும் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வாழ்த்தினர்.</p>
