அரசு கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு
7 Aug 2026, 11:29 pm

அரசு கல்லூரியில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

அறந்தாங்கி, ஆக. 7- புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே, பெருநாவலூரில் இயங்கி வரும் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், போதைப்பொருள் எதிர்ப்பு வாரத்தின் ஒரு பகுதியாக, போதைப் பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் முனைவர் ம.துரை தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் மு. அன்பழகன், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கா. காளிதாஸ், ஆங்கிலத்துறைத் தலைவர் பேராசிரியர் அ. கணேசன், எனது பாரதம் வலைதள தன்னார்வலர்கள் முன்னிலை வகித்தனர்.

போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை முதல்வர் சார்பாக, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை வாசிக்க, பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் ஏற்றுக் கொண்டனர்.