முந்தய பக்கம்

அறந்தாங்கியில் ரூ.80 லட்சத்திற்கு ஆடு விற்பனை

26 May 2026, 10:42 pm
அறந்தாங்கியில் ரூ.80 லட்சத்திற்கு ஆடு விற்பனை
<p><strong>அறந்தாங்கியில் ரூ.80 லட்சத்திற்கு ஆடு விற்பனை</strong></p><p>அறந்தாங்கி, மே 26- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெறும். இந்த சந்தை யில் அறந்தாங்கி நகரம், சுற்றுவட்டார நூற்றுக்கணக்கான கிராம பொதுமக்கள் வாரம்தோறும் தங்கள் வீட்டிற்கு தேவை யான மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்கிசெல்வார்கள். சந்தையின் ஒரு பகுதியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதி மற்றும் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆடுகள் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டு, திருமணம் மற்றும் திருவிழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பொதுமக்கள் ஆடுகளை வாங்கி செல்வார்கள். இந்நிலையில், வியாழனன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு அறந்தாங்கி சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. சாதாரண நாட்களில் ரூ.20 லட்சம் அளவில் விற்பனை செய்யப்படும் ஆடுகள், செவ்வாயன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு ரூ.80 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram