தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆரணி பேரூராட்சியில் மின்தடையை சீரமைக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

3 Jun 2026, 11:24 pm
ஆரணி பேரூராட்சியில் மின்தடையை  சீரமைக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
<p><strong>ஆரணி பேரூராட்சியில் மின்தடையை சீரமைக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்</strong></p><p>திருவள்ளூர், ஜூன் 3- திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகில் உள்ள ஆரணி பேரூராட்சியில் அடிக்கடி நிலவும் மின் தடையைச் சீரமைக்கக் கோரி, அனைத்திந்திய ஜன நாயக மாதர்சங்கத்தினர் மின் வாரிய அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர். ஆரணி பேரூராட்சியில் பஜார் தெரு,அரசு மருத்துவ மனை, பெண்கள் மேல்நிலை ப்பள்ளி, கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்கள் அமைந்துள்ளன மேலும், சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் தங்க ளின் விளை பொருட்களை விற்க இப்பகுதிக்கே வரு கின்றனர். எப்போதும் பர பரப்பாகக் காணப்படும் இப்பேரூராட்சியில், கடந்த 15 நாட்களாகக் காலையிலி ருந்து நள்ளிரவு 2 மணி வரை விட்டு விட்டு மின் தடை ஏற்படுகிறது. இம்மின்தடையால் நெசவுத்தொழில், விவசா யம் மற்றும் வியாபாரம் கடுமையாகப் பாதிக்கப் ்பட்டுள்ளது. மேலும், இரவு நேர மின்தடையைப் பயன் படுத்திச் சமூக விரோதி கள் மற்றும் போதைப் பொருள் நடமாட்டம் அதி கரித்துள்ளதால் பொது மக்கள் அச்சமடைந்துள் ளனர். இப்பிரச்சனையைச் சீர மைக்க வலியுறுத்தி, மாதர் சங்கத்தினர் மின் வாரிய செயற்பொறியாளரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்ற அதிகாரி, மின் வாரியத்தில் ஆட்கள் பற்றா க்குறை இருப்பதாகவும், இப்பிரச்சினை தமிழ்நாடு முழுவதும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனினும், அதிகாரிகள் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலி யுறுத்தியுள்ளனர். இம்மனு அளிக்கும் நிகழ்வில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.பத்மா, பொன்னேரி பகுதி பொருளாளர் எஸ்.நாக லட்சுமி, விவசாய தொழிலா ளர்கள் சங்க மாவட்டத் தலை வர் இ.தவமணி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர் பி.அருள் ஆகியோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.