தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பல்லாங்குழியான ஆரணி சாலை பேரூராட்சி அலட்சியத்தால் மக்கள் அவதி

4 Nov 2026, 11:49 pm
பல்லாங்குழியான ஆரணி சாலை  பேரூராட்சி அலட்சியத்தால் மக்கள் அவதி

பல்லாங்குழியான ஆரணி சாலை பேரூராட்சி அலட்சியத்தால் மக்கள் அவதி

திருவள்ளூர், நவ.4- திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி பேரூராட்சியில்முறையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் இந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த பேரூராட்சியில், ஆரணிபேருந்து நிறுத்தம் முதல் சுப்பிரமணிய நகர்வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரச் சாலைகடுமையான சேதமடைந்துள்ளது. ஜி.என்.செட்டி தெரு, பாலவாக்கம், கள்ளூர், ஐயர் கண்டிகை மற்றும் ஆந்திர மாநிலம் சத்தியவேடுசெல்லும் மிகமுக்கிய இணைப்புச் சாலையாக இது விளங்கி வருகிறது.

மேலும், பேரூராட்சி மன்றஅலுவலகம், அரசு ஆரம்பப்பள்ளி, சுகாதார மையம்,கால்நடை மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் திருக்கோவில்கள் அமைந்துள்ள இச்சாலைமுழுமையாகப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பல்லாங்குழியாகக் குண்டும்குழியுமாக மாறியுள்ளது.கடந்த ஆண்டு இச்சாலையை அமைக்கப் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் டெண்டர் விடப்பட்டும், பணிகள் முடிக்கப்படாமல் அரைகுறையாக கைவிடப்படடுள்ளது. இதனால், இரவு பகல் பாராமல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்கிபடுகாயமடைவதுடன், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன.“ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என வேதனை தெரிவிக்கும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்,அசம்பாவிதங்கள் தொடரும் முன் தமிழக அரசும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு, போர்க்காலஅடிப்படையில் சாலையை அமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.