முந்தய பக்கம்

100 நாள் வேலை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

15 May 2026, 1:05 am
100 நாள் வேலை வழங்கக் கோரி  மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
<p><strong>100 நாள் வேலை வழங்கக் கோரி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்</strong></p><p>ஆரணி, மே 14- திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டாரப் பகுதியில் வசிக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் (மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்) வேலை வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு, கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆரணி வட்டார வளர்ச்சி அலு வலகத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் ப. செல்வன் மற்றும் மாவட்ட நிர்வாகி பெ. கண்ணன் ஆகியோர் நேரில் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து உரையாற்றினர். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலை வர்கள் ஏ. சந்திரசேகர், வி. திவ்யா, ஒன்றியத் தலைவர்கள் அருண்குமார், சீனு மற்றும் பொருளாளர்கள் பெரு மாள், சங்கர் உள்ளிட்ட சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்களும், மாற்றுத் திறனாளிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram