தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அரணி வாய்க்கால்கள் காணவில்லை நிலங்களுக்கு பாசன நீர் செல்வதில் சிக்கல்

29 Sept 2026, 1:47 am
அரணி வாய்க்கால்கள் காணவில்லை நிலங்களுக்கு பாசன நீர் செல்வதில் சிக்கல்

அரணி வாய்க்கால்கள் காணவில்லை நிலங்களுக்கு பாசன நீர் செல்வதில் சிக்கல்

உடுமலை, செப்.28-விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத் திட்டத்தின் பிரதான கால்வாய்களில் இருந்து விளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரணி வாய்க்கால்கள் பல இடங்களில் காணாமல் போயுள்ளன. இதனால் கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் செல்வதில் சிக்கல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு கடைமடை பாசன நிலங்கள் வரை கான்கிரீட் கட்டமைப்புடன் இருந்த அரணிவாய்க்கால்கள், தற்போது முறையான பராமரிப்பின்றி மண்மேடாக மாறியுள்ளன. பல இடங்களில் வாய்க்காலின்தடமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி திட்டத்தின் மூலம் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் சுமார் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பிரதான கால்வாய்கள் பராமரிக்க நிதி ஒதுக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்துவிளைநிலங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் அரணி வாய்க்கால்கள் கண்டுகொள்ளப்படாமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இணைந்து அரணி வாய்க்கால்களின் முழுப்பாதையையும் உடனடியாக ஆய்வு செய்து, காணாமல் போன பகுதிகளை கண்டறிந்துமீட்டெடுக்க வேண்டும். மண்மேடுகளை அகற்றி, தேவையான இடங்களில் கான்கிரீட் கட்டமைப்புகளை ஏற்படுத்தி, கடைமடை விவசாய நிலங்களுக்கு பாசன நீர் தடையின்றி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.