முந்தய பக்கம்

ஆரம்பாக்கத்தில் வாலிபர்கள் ரத்ததானம்

19 May 2026, 1:12 am
ஆரம்பாக்கத்தில்   வாலிபர்கள் ரத்ததானம்
<p><strong>ஆரம்பாக்கத்தில் வாலிபர்கள் ரத்ததானம்</strong> </p><p>திருவள்ளூர், மே 18- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கும்மிடிபூண்டி பகுதி குழு சார்பில் ஞாயிறன்று (மே 17), ஆரம்பாக்கத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகாமில் பகுதி செயலாளர் எஸ்.செல்வா தலைமை தாங்கினார். பாரதிநகர் கிளை செயலாளர் பி.அஜித்குமார் வரவேற்றார். இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.மதன், பொருளாளர் சந்துரு, மாவட்ட துணைத் தலைவர் ஜெ.த.வசந்த்பௌத்தா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மு.தினேஷ், பகுதி செயலாளர் சக்திவேல், எஸ்எப்ஐ மாவட்ட செயலாளர் சஞ்சய் குமார், சிபிஎம் வட்டச் செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், விவசாயிகள் சங்கத்தின் வட்டச் செயலாளர் எம்.சிவக்குமார்,மருத்துவர்கள் சங்கமி, சாம்ராஜ் ஆகியோர் பேசினர். பொன்னேரி அரசு மருத்துவமனையின் மருத்துவ குழுவினர் ரத்ததை சேகரித்தனர். பகுதி பொருளாளர் ஹேமந்த் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram