ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்ததாக பதிவுசெய்து ரூ.2.65 கோடி மோசடி 7 பேர் மீது வழக்குப்பதிவு- ஊழியர் கைது
16 Jun 2026, 9:22 pm

ஆரல்வாய்மொழி கூட்டுறவு வங்கியில் நகைகளை அடகு வைத்ததாக பதிவுசெய்து ரூ.2.65 கோடி மோசடி

7 பேர் மீது வழக்குப்பதிவு- ஊழியர் கைது

நாகர்கோவில், ஜூன் 16- குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழி கூட்டுறவு வங்கியில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை தங்க நகைகளை அடகு வைப்பது போல், ரூ.2.65 கோடி மோசடி செய்யப்பட்டது தணிக்கையில் தெரியவந்தது. இது தொடர்பாக சங்க துணைப் பதிவாளர் முருகேசன் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.இதில் வங்கியின் செயலாளராக இருந்த கோட்டாறு பகுதியை சேர்ந்த சகாய திலக்ராஜ், வங்கி எழுத்தர்கள் ஆரல்வாய்மொழியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மற்றும் சிவனேஸ்வரி உட் பட7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக விசாரணை நடந்து வந்த நிலையில், மோசடியில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து தலைமறைவாகினர். இதில் முத்துக்கிருஷ்ணனை மட்டும் போலீசார், பிடித்து விசார ணைக்காக நாகர் கோவிலில் பொரு ளாதார குற்றப்பிரிவு காவல் நிலை யத்துக்கு கொண்டு வந்தனர்.

விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு திரு நெல்வேலியில் பொருளா தார குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மேலும் 6 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்களில் சிவனேஸ்வரி உள்பட 2 பேர் பெண்கள் ஆவர்.

இந்த மோசடி தொடர்பாக கேட்டபோது,வங்கியில் செயலாளர் பொறுப்பில் இருந்த சகாய திலக்ராஜ் மேற்பார்வையில் தான் இந்த மோசடி நடந்துள்ள தாக கூறப்படுகிறது.

இவர்கள் அனைவரும் சேர்ந்து தங்க நகை களை அடகு வைப்பது போல் கணக்கு பதிவு செய்து, பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் ந்த நகைகளை வங்கியின் லாக்க ருக்கு கொண்டு செல்லவில்லை. இது லாக்கரில் இருந்த நகை தணிக்கையில் கண்டுபிடிக்கப் பட்டது. அதன் பின்னர் நடந்த விசாரணையில் தான், இவர்கள் தங்களுக்கு வேண்டப்பட்ட நபர்களின் தங்க நகைகளை வாங்கி அவர்கள் பெயரில் ஆதார் கார்டு பதிவு செய்து அடகு வைப்பது போல் வைத்து பணத்தை எடுத்துள்ளனர். ஆனால் லாக்கரில் வைக்க வேண்டிய நகையை வைக்க வில்லை.

அனைத்து பதிவேடுகளிலும் நகைகள் பற்றிய விபரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. வேறு சிலருக்கும் தொடர்பு உள்ள தாக கூறப்படுகிறது. தலை மறைவாக உள்ளவர்களை தேடி வருகிறோம். அவர்கள் கைது செய்யப்பட்டால் தான் முழு விபரம் தெரிய வரும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது.