அரக்கோணம் வி.ஜி.என் பள்ளியில் அக்.3-ல் இலவச மருத்துவ முகாம்
2 Oct 2026, 2:18 am

அரக்கோணம் வி.ஜி.என் பள்ளியில் அக்.3-ல் இலவச மருத்துவ முகாம்

ராணிப்பேட்டை, அக்.1-கிராமப்புற கல்வி, தொழில்துறை மறுமலர்ச்சி யாளர், கொடை வள்ளல் மறைந்த முனைவர் வி. கெங்கு சாமி நாயுடுவின் 95 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து சனிக்கிழமை (அக். 3) காலை 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.இந்த முகாமில் உயரத்திற்கேற்ப உடல் எடை பரிசோதனை, ரத்தக் கொதிப்பு மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீரில் புரதம் மற்றும் சர்க்கரை பரிசோதனை, சிறுநீரகத்தின் செயல்பாடு தொடர்பான அடிப்படை தகவல்களை மருத்துவ ஆலோசனை அறிந்து கொள்ளும் வகை யில் முகாம் ஏற்பாடு செய்யப்

பட்டுள்ளது.இதில் 25 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இரு பாலரும் கலந்து கொண்டு இம்மருத்துவ முகாமின் மூலம் பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமாக மருந்து உட்கொள்பவர்கள் தங்களது மருத்துவச் சீட்டுகளை கொண்டு வருமாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது. முகாமில் கலந்து கொண்டு, உடல்நலம் குறித்த அடிப்படை பரிசோதனைகளை இலவசமாக செய்து கொண்டு பயன்பெறலாம். முன்பதிவு தொடர்பான விவரங்களுக்கு 7373045902 என்ற கைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ள பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.