அரக்கோணத்தில் திறக்கப்படாத ‘தூய்மை இந்தியா’ கழிப்பிடம்
12 Jun 2026, 10:36 pm
<p><strong>அரக்கோணத்தில் திறக்கப்படாத ‘தூய்மை இந்தியா’ கழிப்பிடம்</strong></p><p>அரக்கோணம்,ஜூன் 12- அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ் பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் பல மாதங்களாகப் பூட்டிக் கிடப்பதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி யுள்ளனர். இதனை உடனடி யாகப் பொது மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டு மெனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். அரக்கோணம் நகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலை யத்தில், ‘தூய்மை இந்தியா’ 2.0 திட்டத்தின் கீழ் 2023-24-ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ரூ. 1.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிறுநீர் கழிப்பிடம் கட்டப்பட்டது. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து நீண்ட நாட்களாகியும், இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறக்கப் படவில்லை. இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிக்க வழியின்றித் தவிக்கின்றனர். கழிப்பிடம் பூட்டிக்கிடப்ப தால், பேருந்து நிலைய வளாகத்திலேயே சுகா தாரச் சீர்கேடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட இந்தக் கழிப்பிடத்தை உடனடியாகத் திறந்து, சுகாதாரத்தைப் பேண நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
