முந்தய பக்கம்

அரக்கோணத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு

8 Jul 2026, 10:47 pm
அரக்கோணத்தில்  தீக்கதிர் சந்தா சேர்ப்பு
<p><strong>அரக்கோணத்தில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு</strong></p><p> ராணிப்பேட்டை, ஜூலை 8 – அரக்கோணம் பகுதியில் ஆசிரியர்கள் மத்தியில் ‘தீக்கதிர்’ சந்தா சேர்க்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் என். காசிநாதன் தலைமையில் இந்தச் சிறப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது. மக்களுக்கான செய்திகளையும், உழைப்பாளர்களின் குரலையும் தாங்கி வரும் தீக்கதிர் நாளிதழைப் பரப்பும் நோக்கில், அரக்கோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஆசிரியர்களைச் சந்தித்து இக்களப்பணி நடத்தப்பட்டது. இதில் ஆசிரியர்கள் பலரும் ஆர்வத்துடன் தங்களது சந்தாக்களை வழங்கினர். இந்நிகழ்வில், கட்சியின் மூத்த தோழர் சி. துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சந்தா சேர்ப்பு பணியை முன்னெடுத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram